Exco Infrastruktur & Kemudahan Awam, Pemodenan Pertanian Dan Industri Asas Tani, Tuan Ir Izham Hashim melawat pameran gerai pada Program Selangor Agro Bandar di Amerin Mall, Seri Kembangan pada 29 Ogos 2020. Foto REMY ARIFIN/SELANGORKINI
HEALTHMEDIA STATEMENTNATIONALSELANGOR

சிலாங்கூரில் மேலும் அதிகமான தொழில்துறைகள் இன்று தொடங்கி செயல்பட அனுமதி 

ஷா ஆலம், ஜூலை 8– சிலாங்கூர் மாநிலத்தின் கடுமையாக்கப்பட்ட நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை அமல் செய்யப்பட்ட பகுதிகளில் உள்ள மின்னியல், மின்சாரம் மற்றும் அதன் தொடர்புடைய துறைகள், வான்போக்குவத்துத் துறை, மருத்துவ மற்றும் உணவுத் தயாரிப்புக்கான இயந்திர மற்றும் சாதனத் துறை மற்றும் முக்கிய உணவு, பானத் தயாரிப்புத் துறைகள் இன்று தொடங்கி செயல்படுவதற்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.

இந்த முடிவை விரைந்து அமல்படுத்தும் நோக்கில் அனைத்துலக வாணிக மற்றும் தொழிலியல் அமைச்சு, அமைச்சரவைக் கூட்டம் முடிந்த கையோடு நிதியமைச்சர் மற்றும் பொருளாதார விவாகரங்களுக்கான பிரதமர் துறை அமைச்சர் ஆகியோருடன் சந்திப்பை நடத்தியது.

 அனைத்துலக விநியோக சங்கிலி தொடர்புக்கு இத்துறைகள் ஆற்றி வரும் பங்களிப்பின் முக்கியத்துவத்தையும் நாட்டின் தேவைக்கு உணவு மற்றும் மெதுபானத் தயாரிப்பின் அவசியத்தையும் அமைச்சின் இந்த முடிவு உணர்துவதாக உள்ளது என்ற அவ்வமைச்சு வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.

வான் போக்குவரத்து துறையைப் பொறுத்த வரை பழுதுபார்ப்பு, பராமரிப்பு உள்ளிட்ட துறை துறைகளுக்கும் அனுமதி வழங்கப்பட்டுள்ளது.

இந்த நிறுவனங்கள் ஜூன் 22ஆம் தேதியிட்ட “பிகேபி 3.0“ என்ற வாசகத்துடன் கூடிய அனைத்துலக வாணிக மற்றும் தொழிலியல் அமைச்சின் அனுமதி கடிதத்தைப் பயன்படுத்தி தங்கள் பணியை தொடங்க முடியும்.


Pengarang :