ECONOMYHEALTHNATIONAL

நாட்டில் நேற்று பதிவான 6,148 கோவிட்-19 சம்பவங்களில் 1.6% மட்டுமே ஆபத்தானவை

கோலாலம்பூர், அக் 28- நாட்டில் நேற்று பதிவான 6,148 கோவிட்-19 சம்பவங்களில் 1.6 விழுக்காடு அல்லது 101 மட்டுமே மூன்றாம், நான்காம் மற்றும் ஐந்தாம் கட்டத்தைச் சேர்ந்தவை என்று சுகாதாரத் துறை தலைமை இயக்குநர் டான்ஸ்ரீ டாக்டர் நோர் ஹிஷாம் அப்துல்லா கூறினார்.

நிமோனியா எனப்படும் நுரையீரல் பாதிப்புக்குள்ளானவர்கள் மூன்றாம் கட்ட நோயாளிகளாகவும் ஆக்சிஜன் உதவி தேவைப்படுவோர் நான்காம் கட்ட நோயாளிகளாகவும் செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டவர்கள் ஐந்தாம் கட்ட நோயாளிகளாகவும் வகைப் படுத்தப்பட்டுள்ளனர்.

நேற்று நோய்த் தொற்றுக்கு ஆளானவர்களில் 6,074 பேர் அல்லது 98.4 விழுக்காட்டினர் நோய்க்கான அறிகுறி இல்லாத அல்லது லேசான அறிகுறி கொண்ட ஒன்றாம் மற்றும் இரண்டாம் கட்ட நோயாளிகளிகள் என்று நோர் ஹிஷாம் தெரிவித்தார்.

மொத்தம் 6,127 சம்பவங்கள் உள்நாட்டிலும் 21 சம்பவங்கள் வெளிநாட்டிலிருந்தும் பரவியவை எனக் கூறிய அவர், இதன் வழி நாட்டில் கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு ஆளானவர்களின் எண்ணிக்கை 24 லட்சத்து 48 ஆயிரத்து 372 ஆக உயர்ந்துள்ளது என்றார்.

நேற்று 7,595 பேர் நோய்த் தொற்றிலிருந்து குணமடைந்த வேளையில் இந்நோயிலிருந்து விடுபட்டவர்களின் எண்ணிக்கை 23 லட்சத்து 47 ஆயிரத்து 985 ஆக ஏற்றம் கண்டுள்ளது என்றார் அவர்.

நாடு முழுவதும் நேற்று ஒன்பது தொற்று மையங்கள் அடையாளம் காணப்பட்டதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தீவிர சிகிச்சைப் பிரிவில் 563 நோயாளிகள் சிகிச்சை பெற்று வரும் வேளையில் அவர்களில் 292 பேருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது என அவர் சொன்னார்.

 


Pengarang :