ALAM SEKITAR & CUACAMEDIA STATEMENTNATIONALPBT

தாமான்  ஸ்ரீ மூடாவில் 16 முறை வெள்ள அபாய சங்கு ஒலித்தது- ஜே.பி.எஸ். தகவல்

ஷா ஆலம், ஜன 5-  கடும் வெள்ளம் ஏற்பட்ட டிசம்பர் 18 ஆம் தேதியன்று தாமான் ஸ்ரீ மூடா 2 அபாய சங்கு நிலையத்திலிருந்து 16 முறை வெள்ள அபாய ஒலி எழுப்பப்பட்டதாக வடிகால் மற்றும் நீர்பாசனத் துறை (ஜே.பி.எஸ்.) கூறியுள்ளது.

அதே நிலையத்திலிருந்து மேலும் ஆறு முறை எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டதாக அத்துறை பேஸ்புக் வாயிலாக வெளியிட்ட அறிக்கையில் தெரிவித்தது.

ஸ்ரீ மூடா 2 அபாய சங்கு நிலையத்திலிருந்து 10.30 மணி முதல் எச்சரிக்கை ஒலி ஒலிக்கத் தொடங்கியது. அதே சமயம் பிற்பகல் 12,30 மணி முதல் இரவு 8.00 மணி வரை அபாய ஒலி ஒலிக்கப்பட்டது என்று அவ்வறிக்கை கூறியது.

தாமான் ஸ்ரீ மூடா 3 நிலையத்திலிருந்து 10 முறை அபாய மற்றும் எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்டதாகவும் அவ்வறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.

இந்த நிலையத்தில் விடியற்காலை 2.00 மணி முதல் காலை 7.00 மணி வரை இந்த எச்சரிக்கை ஒலி எழுப்பப்பட்ட வேளையில் காலை 11.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை அபாய ஒலி ஒலிக்கப்பட்டது எனவும் அத்துறை குறிப்பிட்டது.

கடந்த டிசம்பர் 20 ஆம் தேதி கிள்ளான் ஆற்றில் நீரின் அளவைக் குறைப்பது உள்ளிட்ட பல்வேறு வெள்ளத் தடுப்பு நடவடிக்கைகள் தாமான் ஸ்ரீ மூடா பகுதியில் மேற்கொள்ளப்பட்டதாகவும் கூறப்பட்டது.


Pengarang :