ஷா ஆலாம் – சிலாங்கூர் பல்கலைக்கழகமான யுனிசெல் சார்ந்த மாணவர்கள் கல்வி மற்றும் அவர்கள் சார்ந்த கல்வியல் துறைகள் மட்டுமின்றி புறப்பாட நடவடிக்கைகளிலும் ஆளுமைக் கொண்டிருக்க வேண்டும் என அப்பல்கலைக்கழகத்தின் மாணவர் நலன் பிரிவு டீன் அமிடி அப்துல் மனான் நினைவுறுத்தினார்.
மாணவர்கள் எந்நேரமும் கல்வியில் மட்டும் கவனம் கொண்டிருக்காலம் அவர்கள் சார்ந்த இயக்கங்கள் மற்றும் கழகங்களிலும் சிறந்த பங்களிப்பினை கொண்டிருக்க வேண்டும்.இயக்கங்களும் கழகங்களும் முன்னெடுக்கும் நடவடிக்கைகளிலும் ஆர்வமுடன் பங்கெடுக்கவும் யுன்செல் மாணவர்கள் முன் வர வேண்டும் என்றார்.
மாணவர்கள் மத்தியில் இச்சிந்தனை உயிர்ப்பித்தால் யுனிசெல் மாணவர்கள் கல்வியிலும் புறப்பாட நடவடிக்கைகளிலும் சரிநிகரான ஆளுமையையும் திறனையும் கொண்டிருப்பதை உறுதி செய்ய முடியும் என்றும் அவர் யுன்செல் பல்கலைக்கழகத்தின் 6.0 இயக்கங்கள் மற்றும் கழகங்களின் தொடக்க விழாவில் இதனை குறிப்பிட்டார்.
இதற்கிடையில்,பெருநிறுவன தொடர்பு இயக்குனர் ஹஸ்ரி அபு ஹசான் இந்த திட்டம் தொடர்ந்து ஆறாவது ஆண்டாக நடைபெற்று வருவதாகவும் குறிப்பாக முதலாம் ஆண்டு மாணவர்களுக்கு இப்பல்கலைக்கழகத்தின் இயக்கங்கள் மற்றும் கழங்கள் ஒரு அறிமுகமாய் இஃது தொடர்ந்து நடைபெற்று வருவதாகவும் கூறினார்.
யுன்செல் பல்கலைக்கழகத்தில் ஓவியக்கழகம்,இந்தியர் பண்பாடு மற்றும் மொழியியல் கழகம்,கணக்கியல் இயக்கம்,ரஃக்பி,தேக்வாண்டோ,கூடைப்பந்து உட்பட பல்வேறு கழகங்களும் இயக்கங்களும் செயல்பட்டு வரும் வேளையில் ஒவ்வொரு ஆண்டும் இந்த கழகம் மற்றும் இயக்கங்களின் எண்ணிக்கையும் தொடர்ந்து அதிகரித்து வருவதாகவும் கூறினார்.
மாணவர்கள் தங்களுக்கு தேவையான விருப்பமான இயக்கங்கள் மற்றும் கழகங்களில் இணைந்து தங்களின் திறனை வெளிப்படுத்தவும் ஆளுமைக் கொள்ளவும் யுன்செல் முழு சுதந்திரமும் அங்கீகாரமும் வழங்குவதாகவும் அவர் மேலும் கூறினார்.முதலாம் ஆண்டு மாணவர்களுக்காக நடத்தப்பட்ட அறிமுக நிகழ்வின் போது இது குறித்து விளக்கப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது.