NATIONALRENCANA PILIHAN

கைப்பேசியை பயன்படுத்துவது ஆபத்து

ஷா ஆலம், மே 29:

கைப்பேசிகள் பயன்படுத்தும் போது பாதுகாப்பு அம்சங்களை பொது மக்கள் பின்பற்ற வேண்டும், இல்லை எனில் பாதகமான விளைவுகளை சந்திக்க நேரிடும் என மலேசிய பயனீட்டாளர் கூட்டமைப்பு தலைவர் டத்தோ டாக்டர் மாரிமுத்து நடேசன் கூறினார். பயனீட்டாளர்கள் கைப்பேசிகளை எண்ணெய் நிலையத்திலோ அல்லது சார்ஜ் செய்யும் போது பயன்படுத்தக் கூடாது என்று அறிவிக்கப்படுகிறது.

”   சார்ஜ் செய்யும் கருவி மற்றும் பெட்டரி அசல் என்று உறுதி செய்ய வேண்டும் மற்றும் சார்ஜ் செய்யும் போது கைப்பேசிகளை அடைத்து விட வேண்டும். தற்போது கைப்பேசிகள் தொலை தொடர்பு கருவியாக மட்டும் இல்லாமல் படங்கள் பார்க்கவும், கணினி விளையாட்டு, சமூக வலைதளத்திலும் பயன்படுத்தி வரும் நடவடிக்கை பயனீட்டாளர்கள் மிக கவனமாக இருக்க வேண்டும்.,” என்று கூறினார்

மலாக்காவில் 19 வயது இளைஞன் ‘பவர் பேங்க்’ சார்ஜ் செய்து கொண்டு கைப்பேசியை பயன்படுத்தியதால் மின்சாரம் தாக்கி இறந்ததாக கூறப்படும் செய்தியை மேற்கோள்காட்டி டத்தோ மாரிமுத்து கூறினார். கடந்த ஆண்டு ஆகஸ்ட் 25, ஒரு ஒளிப்பதிவாளர் தனது தொடை பகுதியில் இருந்த ‘பவர் பேங்க் ‘ எரிந்து காயம் ஏற்பட்டது தலைநகரில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. 27 வயது படகு இயக்கும் இளைஞன் ஒருவன் சார்ஜ் செய்த கைப்பேசி வெடித்து காயங்களுக்கு உள்ளான சம்பவம் கெடா, யான் என்ற இடத்தில் கடந்த ஆண்டில் ஏப்ரல் 23-இல் நடந்தது குறிப்பிடத்தக்கது.


Pengarang :