PBTRENCANA PILIHANSELANGOR

எம்பிஎஸ்ஏ இன்னும் ரிம 13.8 மில்லியன் மதிப்பிலான உள்ளீடு ஜிஎஸ்டி வரியை பெறவில்லை

ஷா ஆலம், ஜூலை 26:

ஷா ஆலம் மாநகராட்சி மன்றம் (எம்பிஎஸ்ஏ) இன்னும் தனது திரும்ப பெறக்கூடிய உள்ளீடு ஜிஎஸ்டி வரியை பெறாமல் இருக்கிறது. கடந்த ஆண்டு 2016 ஜூலையில் இருந்து நவம்பர் வரை ரிம 13.8 மில்லியன் சுங்கத்துறையிடம் இருந்து கிடைத்திருக்க வேண்டியது என்று ஷா ஆலம் மாநகராட்சி மன்றத்தின் தொழில்முறை மற்றும் பொது உறவு பிரிவு தலைவர் ஷாரின் அமாட் கூறினார். இதில் ரிம 4.4 மில்லியன் தொகையை கடந்த மே மாதம் மலேசிய அரச சுங்கத்துறை இலாகா (சுங்கத்துறை) தள்ளுபடி செய்தது என்பது குறிப்பிடத்தக்கது.

”   எம்பிஎஸ்ஏ சுங்கத்துறையை தொடர்பு கொண்டு கேட்டபோது எங்களின் ஜிஎஸ்டி அறிக்கையை மறுசீரமைப்பு செய்யுமாறு அறிவிறுத்தியது. நாங்கள் தற்போது ஜிஎஸ்டி வரி அறிக்கையை மேம்படுத்தும் பணியில் ஈடுபட்டு வருகிறோம். நாங்கள் உடனடியாக ஜிஎஸ்டியில் அனுபவம் கொண்ட நிபுணர்களை நியமனம் செய்து உள்ளோம்,” சிலாங்கூர் இன்றுக்கு கூறினார்.

PBT SELANGOR

 

 

 

 

 

நேற்று, மலேசிய அரச சுங்கத்துறை இலாகாவின் தலைமை இயக்குநர், டத்தோ ஸ்ரீ தி. சுப்பிரமணியம் சிலாங்கூர் மாநிலத்தில் உள்ள 12 ஊராட்சி மன்றங்களின் ஜிஎஸ்டி வரி அறிக்கை நம்பும்படியாக இல்லை என்றார். இதனால் திருப்பிக் கொடுக்க வேண்டிய ரிம 36 மில்லியன் தாமதம் ஆகிறது என்று விவரித்தார்.

இதனிடையே, சிலாங்கூர் மாநில ஊராட்சி மன்றம், சட்ட விரோத தொழிற்சாலை ஒழிப்பு மற்றும் புதிய கிராம மேம்பாடு ஆகியவற்றின் ஆட்சிக் குழு உறுப்பினர் இயான் யோங் ஹியான் மேற்கண்ட சுங்கத்துறை தலைமை இயக்குநரின் அறிக்கையை கண்டு வேதனை அளிக்கிறது என்றும் சுங்கத்துறை மேலும் திறன் கொண்ட வழிமுறையை பயன்படுத்தி இந்த சிக்கலை தீர்த்து வைக்குமாறு வேண்டுகோள் விடுத்தார்.

கிள்ளான் நகராண்மை கழகத்தின் தலைவர் டத்தோ யாஸிட் பீடின் கூறுகையில், சுங்கத்துறையிடம் இருந்து ‘நம்பமுடியாத’ என்ற அறிக்கையை எதிர்ப்பார்க்கவில்லை ஏனெனில் நகராண்மை கழகங்கள் அனுப்பிய அனைத்து அறிக்கைகளும் சுங்கத்துறையின் நடைமுறையை பின்பற்றி செய்யப்பட்டது என்று வருத்தத்துடன் தெரிவித்தார்.

#கேஜிஎஸ்


Pengarang :