PBTSELANGOR

சமூக தோட்டத் திட்டத்தில் பங்கேற்பீர்!- குடியிருப்பாளர் சங்கத்திற்கு அழைப்பு

காஜாங், ஆக. 28-

உள்ளூர் மக்கள் பயனடையும் வகையில் சமூக தோட்டத் திட்டத்தில் பங்கேற்கும்படி தனது ஊராட்சி மன்றத்தின் கீழ் இயங்கும் குடியிருப்பாளர் சங்கம் மற்றும் கூட்டு நிர்வாக அமைப்பு (ஜேஎம்பி) ஆகியவற்றை காஜாங் நகராண்மைக் கழகம் (எம்பிகேஜே) கேட்டுக் கொண்டது.

தோட்ட அடிப்படையிலான இத்திட்டத்தில்  இலவசமாகப் பங்கேற்கலாம் என்பதோடு இரண்டு சங்கங்கள் மற்றும் சம்பந்தப்பட்ட ஊராட்சி மன்றத்தின் கீழ் முன்கூட்டியே பதிந்து கொள்ளும் கூட்டு நிர்வாக அமைப்பு முதலியவற்றிற்கு மட்டுமே அனுமதி அளிக்கப்படும் என்று எம்பிகேகே அறிக்கை ஒன்றின் வழி தெரிவித்தது.

“பயன்படுத்தப்படாத நிலம் மற்றும் தனிநபருக்குச் சொந்தமில்லாத நிலம் ஆகியவை இத்திட்டத்தில் பங்கேற்கலாம். அதே வேளையில், சமூக தோட்டத்தில் பயிரீடு செய்யும் பணி குடியிருப்பாளர் சங்கம் வழியே மேற்கொள்ள அனுமதிக்கப்படும்” என்று அவ்வறிக்கை விவரித்தது.

” காய்கறிகள், கீரை வகைகள், மூலிகை வகைகள் மற்றும் மூன்று மீட்டருக்குக் கூடுதலாக உயரம் கொண்ட மரம் போன்றவை மட்டுமே இத்திட்டத்தின் கீழ் பயிரிட அனுமதிக்கப்படும்” என்றும் தெரிவிக்கப்பட்டது.


Pengarang :