NATIONAL

கெஅடிலான் தேர்தல் பணிக்குழு கண்டிப்புடன் செயல்பட வேண்டும்

பெட்டாலிங் ஜெயா, ஆகஸ்ட் 9:

கெஅடிலான் கட்சியின் 2018-ஆம் ஆண்டிற்கான தேர்தலில் வாக்குகளை கவர எந்த ஒரு அதிகார துஷ்பிரயோகம் நடக்காமல் இருக்க அதன் தேர்தல் பணிக்குழு கண்டிப்புடன் செயல்பட வேண்டும் என்று கெஅடிலான் கட்சியின் மூத்த ஆலோசகர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் நினைவுறுத்தினார்.  கட்சியின் தேர்தல், லஞ்ச ஊழல் மற்றும்  முறைகேடுகள் இன்றி நடைபெற வேண்டும் என்று வலியுறுத்தினார்.

”  கெஅடிலான் தேர்தல் பணிக்குழுவில் நடுநிலையாக செயல் பட முடியாமல் போனால், சம்பந்தப்பட்ட நபர்கள் குழுவில் இருந்து பின்வாங்க வேண்டும். தேர்தல் பணியாளர்கள் இந்த தேர்தலில் தீவிரமாக கண்காணிக்க வேண்டும். ஏனெனில், தற்போது நாம் மத்திய அரசாங்கத்தை வழி நடத்துகிறோம். வேட்பாளர்கள் தங்களின் பதவியை தவறான முறையில் பயன்படுத்தக் கூடாது. துணப் பிரதமர், அமைச்சர், துணை அமைச்சர், மந்திரி பெசார் மற்றும் ஆட்சிக் குழு உறுப்பினர்கள் தங்களின் பதவியை தவறான முறையில் பயன்படுத்தி வாக்குகளை பெற முயற்சி செய்யக்கூடாது,” என்று கெஅடிலான் கட்சியின் தலைமையகத்தில் நடைபெற்ற செய்தியாளர்கள் கூட்டத்தில் இவ்வாறு அன்வார் பேசினார்.

 

 

 

 

 

 

 

 

இன்னும் அதிகாரப்பூர்வமாக புகார்கள் வரவில்லை என்றாலும், இதன் தொடர்பாக ஐயங்கள் எழத் தோன்றுகிறது என்றார். மற்ற வேட்பாளர்களை புண்படுத்தியோ அல்லது அவதூறு செய்வதை தவிர்க்க வேண்டும் என்று வலியுறுத்தினார்.


Pengarang :