Dato’ Menteri Besar Selangor, Dato’ Seri Amirudin Shari berucap pada Majlis Perhimpunan Bulanan Penjawat Awam di Dewan Jubli Perak, SUK Selangor. 13 Januari 2020. Foto REMY ARIFIN/SELANGORKINI
RENCANA PILIHANSELANGOR

ஐடபள்யூகே நிறுவனத்திற்குப் பதிலாக மாநில அரசு பொறுப்பேற்பது உறுதி!

ஷா ஆலம், ஜன.13-

இண்டா வாட்டர் கொன்சோர்ட்டியம் (ஐடபள்யூகே) நிறுவனத்தின் நடவடிக்கையை மாநில அரசாங்கம் எடுத்துக் கொள்வது குறித்து மத்திய அரசாங்கத்துடன் தொடர்ந்து பேச்சு வார்த்தை நடைபெற்று வருகிறது. துர்நாற்ற தூய்மைக்கேடு மீண்டும் நிகழாது என்பதற்கான உத்தரவாதம் இல்லாததால், தனது தரப்பு இவ்விகாரத்திற்கு பொறுப்பு ஏற்க வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்பட்டுள்ளதாக மந்திரி பெசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி தெரிவித்தார்.

“ஐடபள்யூகே செயல்பாடு துறைமுகத்தில் ஓடும் நீரின் தரத்தின் மீது நேரடி தாக்கத்தை ஏற்படுத்தும் என்பதால் நாங்கள் இதைத் தொடர விரும்புகிறோம்” என்றார் அவர்.
“திரும்பத் திரும்ப நடைபெறும் சம்பவங்களுக்கு உத்தரவாதம் இல்லாததால், தண்ணீரின் தரத்தை உறுதி செய்ய நாம் நேரடியாக நிர்வாகம் செய்வது சிறப்பாக இருக்கும்” என்றார்.

ஜுப்ளி பேராக் மண்டபத்தில் நடைபெற்ற மாநில மாதாந்திர பொது சேவை ஊழியர்களுடான கூட்டத்திற்கு பின்னர் செய்தியாளர்களிடம் அமிருடின் மேற்கண்டவாறு பேசினார்.


Pengarang :