MEDIA STATEMENTSELANGOR

கிள்ளான் பள்ளத்தாக்கில் அடுத்த வாரம் நீர் விநியோகத் தடை- 48 மணி நேரம் நீடிக்கும்

ஷா ஆலம், ஜன 7– புதிய குழாய்கள் பொருத்தும் பணிகள் காரணமாக பெட்டாலிங், ஷா ஆலம் மற்றும் கிள்ளான் வட்டாரத்தில் வரும் 12ஆம் தேதி நீர் விநியோகத் தடை ஏற்படும்.

நீர்  விநியோகத்தை சீராக வைத்திருக்கும் முயற்சியாக ஷா ஆலம், செக்சன் 15இல் கால்ஸ்பெர்க் நிறுவனத்திற்கு அருகே மேற்கொள்ளப்படும் புதிய குழாய்களைப் பொருத்தும் பணிகள் காரணமாக 48 மணி நேரத்திற்கு நீர் விநியோகம் துண்டிக்கப்படுவதாக ஆயர் சிலாங்கூர் நிறுவனம் கூறியது.

அந்த மூன்று மாவட்டங்களையும் சேர்ந்த 36 பகுதிகளில் அடுத்த வாரம் செவ்வாய்க்கிழமை காலை 9.00 மணி  தொடங்கி இரு தினங்களுக்கு இந்த தடை அமல்படுத்தப்படும் என அந்நிறுவனம் தெரிவித்தது.

பயனீட்டாளர்களுக்கு சிறப்பான மற்றும் நட்புறவான சேவையை வழங்கும் முயற்சியின் ஒரு பகுதியாக குழாய்களை மாற்றுவது உள்ளிட்ட அடிப்படை வசதிகளை மேம்படுத்தும் திட்டங்கள் அமல்படுத்தப்படுவதாக அந்த நிறுவனம் வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.

நீர் விநியோகத் தடையை எதிர்கொள்வதற்கு ஏதுவாக போதுமான அளவு நீரை சேமித்து வைத்துக் கொள்ளும்படி பயனீட்டாளர்களை அந்நிறுவனம் கேட்டுக் கொண்டது. மேலும் நீரை சிக்கனமாக பயன்படுத்தும்படியும் அது ஆலோசனை கூறியது.

பாதிக்கப்பட்ட பகுதிகளின் தொலைவு மற்றும் நீர் அழுத்தம் ஆகியவற்றைப் பொறுத்து நீர் விநியோகம் வழக்க நிலைக்குத் திரும்புவதற்கான கால அவகாசம் வேறுபடும் எனவும் அந்த அறிக்கையில் குறிப்பிடப்பட்டுள்ளது.


Pengarang :