ECONOMYPBTSELANGOR

சிலாங்கூரிலுள்ள 12 ஊராட்சி மன்றங்களில்  56 இந்திய பிரதிநிதிகள்

ஷா ஆலம், ஜன 20- சிலாங்கூரிலுள்ள 12 ஊராட்சி மன்றங்களில் 2021/2022 ஆம் தவணைக்கு நியமிக்கப்பட்ட 281 ஊராட்சிமன்ற உறுப்பினர்களில் 56 பேர் இந்தியர்களாவர். மொத்த ஊராட்சி மன்ற உறுப்பினர்கள் எண்ணிக்கையில் இது சுமார் 20 விழுக்காடாகும்.

பி.கே.ஆர். கட்சியின் சார்பாக 30 பேரும் ஜசெக சார்பாக 22 பேரும் அமானா கட்சியின் சார்பாக 4 பேரும் இந்த பொறுப்புக்கு தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

மாநிலத்திலுள்ள மூன்று மாநகர் மன்றங்கள், ஆறு நகராண்மைக்கழகங்கள் மூன்று மாவட்ட மன்றங்களை  இவர்கள் பிரதிநிதிக்கின்றனர்.

கிள்ளான் நகராண்மைக்கழகத்தில் அதிகப்பட்சமாக ஏழு இந்திய பிரதிநிதிகளுக்கு வாய்ப்பு வழங்கப்பட்டுள்ளது. அதனைத் தொடர்ந்து ஷா ஆலம் மாநகர் மன்றம், சுபாங் ஜெயா மாநகர் மன்றம், உலு சிலாங்கூர் மாவட்ட மன்றம் ஆகியவற்றில் தலா அறுவர் தேர்ந்தெடுக்கப்பட்டுள்ளனர்.

கோல சிலாங்கூர் மாவட்ட மன்றம், சிப்பாங் நகராண்மைக்கழகத்தில் தலா ஐவரும் பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம், காஜாங் நகராண்மைக்கழகம், கோல சிலாங்கூர் மாவட்ட மன்றத்தில் தலா நால்வரும் செலாயாங நகராண்மைக்கழகத்தில் மூவரும் சபாக் பெர்ணம் மாவட்ட மன்றத்தில் இருவரும் நியமனம் பெற்றுள்ளனர்.

ஊராட்சி மன்றங்களில் இடம் பெற்ற இந்திய பிரதிநிதிகளின் பெயர்ப் பட்டியல் வருமாறு-

ஷா ஆலம் மாநகர் மன்றம்

  1. வீ. பாப்பாராய்டு (ஜசெக)
  2. பி, யுகராஜா (ஜசெக)
  3. எஸ்.காந்திமதி (ஜசெக)
  4. எஸ். சரவணன் (பிகேஆர்)
  5. எஸ். குமரவேல் (பிகேஆர்)
  6. சைரா பானு (பிகேஆர்)

பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்றம்

  1. ஏ. சுகுமாறன் (பிகேஆர்)
  2. ஜி. சுரேஷ் (பிகேஆர்)
  3. கே. தயாளன் (ஜசெக)
  4. ஆர். நளினா நாயர் (ஜசெக)

சுபாங் ஜெயா மாநகர் மன்றம்

  1. எம், அன்பரசன் (பிகேஆர்)
  2. எஸ். கென்னத் சேம்(பிகேஆர்)
  3. எஸ். ஜஸ்டின் ராஜ் (பிகேஆர்)
  4. மோகன் சிங் (ஜசெக)
  5. எஸ். தமிழரசு (ஜசெக)
  6. இ. மேகநாதன் (ஜசெக)

கிள்ளான் நகராண்மைக் கழகம்

  1. எம். மதுரை வீரன் (பிகேஆர்)
  2. ஆர். ஆதிசரவணன் (பிகேஆர்)
  3. எம். பிரபு (பிகேஆர்)
  4. எம். மகேந்திரன் (பிகேஆர்)
  5. எம். நளன் (ஜசெக)
  6. எம்.புஷ்பவல்லி (ஜசெக)
  7. ஆர். டேனிஸ் ராஜா (ஜசெக)

அம்பாங் ஜெயா நகராண்மைக் கழகம்

  1. ஜெ. விக்னேஸ்வரன் (பிகேஆர்)
  2. ஏ. ரகுநாதன் (பிகேஆர்)
  3. ஆர். மோகன்ராஜ் (ஜசெக)
  4. கே. தனபால் (அமானா)

செலாயாங் நகராண்மைக்கழகம்

  1. வி. அன்முனியாண்டி (பிகேஆர்)
  2. எஸ்.தேவேந்திரன் (பிகேஆர்)
  3. பி. மாரியம்மாள் (ஜசெக)

சிப்பாங் நகராண்மைக்கழகம்

  1. பி. சந்திரன் (பிகேஆர்)
  2. எம். நிர்மலா தேவி (பிகேஆர்)
  3. பி.சிவக்குமார் (ஜசெக)
  4. ஏ. விஜயராணி (ஜசெக)
  5. ஆர். ஆறுமுகம் (அமானா)

காஜாங் நகராண்மைக்கழகம்

  1. ஜி.பாலமுரளி (பிகேஆர்)
  2. ஏ. ராமச்சந்திரன் (பிகேஆர்)
  3. ஆர். தியாகராஜா (ஜசெக)
  4. சி. சங்கீதா (ஜசெக)

கோல லங்காட் நகராண்மைக்கழகம்

  1. ஆர். ஹரிதாஸ் (பிகேஆர்)
  2. கே.பனல்சல்வா (பிகேஆர்)
  3. எம். தனலட்சுமி (பிகேஆர்)
  4. டத்தோ வீ. சுந்தரராஜூ (பிகேஆர்)
  5. எஸ்.நடேசன் (ஜசெக)

உலு சிலாங்கூர் மாவட்ட மன்றம்

  1. ஏ.கனகராஜா (பிகேஆர்)
  2. ஜெ.மரினா (பிகேஆர்)
  3. எஸ். முரளி (ஜசெக)
  4. எஸ். சின்னையா (ஜசெக)
  5. எல்.கமலேசராவ் (ஜசெக)
  6. ஏ. துரை அன்பழகன் (அமானா)

கோல சிலாங்கூர் மாவட்ட மன்றம்

  1. த. ராஜசேகரன் (பிகேஆர்)
  2. வீ. லெணுகா (பிகேஆர்)
  3. வீ. அழகேந்திரன் (ஜசெக)
  4. என். புஷ்பா (அமானா)

சபாக் பெர்ணம் மாவட்ட மன்றம்

  1. கே. ஜெகதீஸ்வரன் (பிகேஆர்)
  2. எம். மகேந்திரன் (பிகேஆர்)

Pengarang :