SAINS & INOVASISELANGORWANITA & KEBAJIKAN

செலாயாங், குருத்வாரா சஹிப் வழிபாட்டுத் தளத்திற்கு புதிய இடம்- மாநில அரசு பரிசீலனை

செலாயாங், ஏப் 12– இங்குள்ள குருத்வாரா சஹிப் சீக்கிய ஆலயத்திற்கு புதிய இடத்தை அடையாளம் காணும் முயற்சியில் சிலாங்கூர் அரசு ஈடுபட்டுள்ளது.

லீமாஸ் எனப்படும் பௌத்த, கிறிஸ்துவ, இந்து, சீக்கிய மற்றும் தோ சமயங்களுக்கான சிறப்பு செயல்குழு  அந்த ஆலயத்திற்கான மாற்று இடத்தை அடையாளம் காணும் நடவடிக்கையில் ஈடுபடுவதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

தற்போதுள்ள இடம் மேம்பாட்டுப் பணிகள் காரணமாக இட நெருக்கடியை எதிர் நோக்கியுள்ளதால் புதிய இடத்தை அடையாளம் காண வேண்டிய அவசியம் ஏற்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

அந்த ஆலயத்திற்கு புதிய இடம் ஏற்கனவே அடையாளம் காணப்பட்டு விட்டது. எனினும், அது மிகவும் சிறியதாக அதாவது கால் ஏக்கர் நிலப்பரப்பில் உள்ளது. தேவையின் அடிப்படையில் பார்த்தால் குறைந்தது ஒரு ஏக்கர் நிலமாவது வேண்டும் என்றா அவர்.

அதிக எண்ணிக்கையிலான பக்தர்கள் இந்த ஆலயத்திற்கு வரும் காரணத்தால் அதற்கு ஏற்ற அளவில் நிலத்தின் பரப்பளவும் இருப்பது அவசியம் என்று அவர் குறிப்பிட்டார்.

செலாயாங் குருத்வாரா சஹிப் ஆலயத்திற்கு நேற்று திடீர் வருகை புரிந்தப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

கோம்பாக், ரவாங் மற்றும் சுங்கை பூலோவை சேர்ந்தவர்கள் இந்த ஆலயத்திற்கு வழிபட வருவதால் ஆலயம் அனைத்து அடிப்படை வசதிகளையும் உள்ளடக்கும் அளவுக்கு விசாலமான நிலத்தை அது கொண்டிருப்பது அவசியம் என்றார் அவர்.


Pengarang :