ECONOMYHEALTHPBTSELANGOR

புக்கிட் காசிங், தாமான் மேடான் தொகுதிகளில் கோவிட்-19 பரிசோதனை- திரளானோர் பங்கேற்பு

ஷா ஆலம், மே 24– புக்கிட் காசிங் மற்றும் தாமான் மேடான்  சட்டமன்றத் தொகுதிகளில் இன்று இலவச கோவிட்-19 பரிசோதனை நடைபெறுகிறது.

புக்கிட் காசிங் தொகுதியில் உள்ள 51ஏ/227 எம்.பி.பி.ஜே. மண்டபத்தில் நடைபெறும் இந்த பரிசோதனை இயக்கத்தில் பங்கு கொள்வதற்காக  பொதுமக்கள் காலை 8.00 மணி முதல் வரிசையில் காத்திருக்கத் தொடங்கினர்.

அனைத்து இனங்களையும் சேர்ந்த மக்கள் எஸ்.ஒ.பி. நடைறைகளுக்கேற்ப கூடல் இடைவெளியைக் கடைபிடித்து சுமார் 100 மீட்டர் தொலைவிற்கு வரிசை பிடித்து நிற்பதை காண முடிந்தது.

தாமான் மேடான் தொகுதிக்கான இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கம் பி.ஜே.எஸ். 2டி/11 எம்.பி.பி.ஜே மண்படத்தில் நடைபெறுகிறது. 

பரிசோதனைக்கு வருவோர்  எஸ்.ஒ.பி. விதிமுறைகளை முறையாக கடைபிடிப்பதை உறுதி செய்ய பெட்டாலிங் ஜெயா மாநகர் மன்ற அமலாக்க அதிகாரிகள், ரேலா உறுப்பினர்கள் மற்றும்  போலீசார் கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

கோவிட்-19 நோய்த் தொற்றைக் கட்டுப்படுத்துவதற்காக மாநில அரசு இம்மாதம் 8ஆம் தேதி முதல் அடுத்த மாதம் 10ஆம் தேதி வரை தினசரி இரு சட்டமன்றத்  தொகுதிகள் வீதம் மாநிலம் முழுவதும் உள்ள 56 தொகுதிகளிலும் இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தை மேற்கொண்டு வருகிறது


Pengarang :