ECONOMYHEALTHPBTSELANGOR

கோவிட்-19 பரிசோதனை- இரு தொகுதிகளில் 7,400 பேர் பதிவு

ஷா ஆலம், மே 27- கோத்தா அங்கிரிக் மற்றும் கோத்தா டாமன்சாரா தொகுதிகளில் நடைபெறும் இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்தில் பங்கு கொள்ள சுமார் 7,400 பேர் இணையம் வாயிலாக முன்பதிவு செய்திருந்தனர்.

செலங்கா செயலி வாயிலாக பதிவு செய்தவர்கள் தவிர்த்து இந்த பரிசோதனை இயக்கத்தில் பங்கு கொள்வதற்காக 500 முதல் 1,000 பேர் வரை மண்டபத்திற்கு நேரில் வந்தனர்.

சிலாங்கூர் மாநில அரசினால் இம்மாத தொடக்கத்தில் ஆரம்பிக்கப்பட்ட இந்த இலவச கோவிட்-19 பரிசோதனை இயக்கத்திற்கு நாளுக்கு நாள் ஆதரவு பெருகி வருவதாக செல்கேட் கார்ப்ரேஷன் சென். பெர்ஹாட் சந்தை மற்றும் தொடர்பு பிரிவு அதிகாரி  நோராபிடா ஜம்ரி கூறினார்.

இங்குள்ள செக்சன் 11 மண்டபத்தில் நடைபெற்ற இந்த பரிசோதனை இயக்கத்தில் பங்கு கொள்ள காலை 7.30 மணிக்கே பொதுமக்கள் வரிசை பிடித்து காத்திருந்தனர். தங்களின் உடலாரோக்கியம் மீது பொதுமக்கள் கொண்டிருக்கும் அக்கறையை இது காட்டுகிறது என்றார் அவர்.

பெட்டாலிங் மாவட்ட நிலையிலான பரிசோதனை இயக்கம் இன்று செக்சன் 11 எம்.பி.எஸ்.ஏ. மண்டபத்திலும் சுபாங் பெஸ்தாரி எம்.பி.எஸ்.ஏ. சமூக மண்டபத்திலும் நடைபெறுவதாக அவர் தெரிவித்தார்.

காலை 9.00 மணி முதல் மாலை 4.00 மணி வரை நடைபெறும் இந்த பரிசோதனை இயக்கம் சீராக நடைபெறுவதை உறுதி செய்வதற்காக ஐம்பது பணியாளர்கள் அவ்விரு மண்டபங்களிலும் பணியமர்த்தப்பட்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.


Pengarang :