ECONOMYHEALTHNATIONALPBT

கார்டினியா ரொட்டிகள் ஜூன் முதல் தேதி முதல் விலையேற்றம்

ஷா ஆலம், மே 29- தங்கள் தயாரிப்பிலான 6 வகை ரொட்டிகள் வரும் ஜூன் முதல் தேதி தொடங்கி விலையேற்றம் காண்பதாக நாட்டின் பிரபல ரொட்டி  தயாரிப்பு நிறுவனமான கார்டினியா பேக்கரிஸ் (கே.எல்.) சென்.பெர்ஹாட் நிறுவனம் அறிவித்துள்ளது.

கார்டினியா செலிசியா ஹெசெல்நட் சாக்லேட் ஸ்பிரிட் 200 கிராம், கார்டினியா டெலிசியா ஹெசெல்நட் சாக்லேட் ஸ்பிரிட் 375 கிராம், கார்டினியா டெலிசியா மில்கி சாக்லேட் ஸ்பிரிட் 200 கிராம் ஆகிய ரொட்டிகள் விலையேற்றம் காண்கின்றன என்று அந்நிறுவனம் வெளியிட்ட அறிக்கை ஒன்று கூறியது.

இதுதவிர கார்டினியா டெலிசியா மில்கி சாக்லெட் ஸ்பிரிட் 375 கிராம், கார்டினியா ஆண்டி ரோஸி, ஒரிஜினல் ஹோம்ஸ்டைல் காயா 200 கிராம், கார்டினியா ஆண்டி ரோஸி –நேச்சுரல் பண்டான் காயா 200 கிராம் ஆகிய ரொட்டிகளின் விலையும் மாற்றம் காண்பதாக அது தெரிவித்தது.

தயாரிப்பு செலவினம் மற்றும் உற்பத்திக்கான கச்சா பொருள்களின் விலை அண்மைய ஆண்டுகளாக கட்டுப்பாட்டற்ற முறையில் உயர்ந்து வருவதாக அந்நிறுவனம் கூறியது.

இவ்வளவு நாட்களாக கூடுதல் செலவினங்களை நாங்களே ஈடு செய்து வந்தோம். எனினும், மாற்று வழி இல்லை எனும் நிலை உருவாகிவிட்ட சூழலில் வரும் ஜூன் மாதம் முதல் தேதி தொடங்கி சில தயாரிப்பு பொருள்களின் விலையை உயர்த்த முடிவெடுத்துள்ளோம் என்றும் அது குறிப்பிட்டது.

 


Pengarang :