ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

வசதி குறைந்தவர்களுக்கு ஷா ஆலம் மாநகர் மன்றம் 2,700 உணவுக் கூடைகளை வழங்கியது

ஷா ஆலம், ஜூலை 8–  கோவிட்-19 நோய்த் தொற்று பரவலால் பாதிக்கப்பட்ட குடும்பங்களுக்கு ஷா ஆலம் மாநகர் மன்றம் கடந்த இரு தினங்களில் 2,700 உணவுக் கூடைகளை விநியோகம் செய்கிறது.

ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் உதவித் திட்டமான “ரெஸெக்கி காசே“ திட்டத்தின் கீழ் நேற்றும் இன்றும் இந்த உணவுக் கூடைகள் விநியோகம் செய்யப்படுவதாக மாநகர் மன்றத்தின் துணை டத்தோ பண்டார் முகமது ருஸ்டி ருஸ்லான் கூறினார்.

பாலர் பள்ளி நடத்துநர்கள் மற்றும் பணியாளர்கள், ஹோட்டல் பணியாளர்கள், ரேலா உறுப்பினர்கள் கலை மற்றும் ஆக்கத்திறன் பிரிவு பணியாளர்கள் ஆகியோர் இந்த உதவித் திட்டத்தில் இலக்காக  கொள்ளப்பட்டதாக அவர் தெரிவித்தார்.

தலா ஐம்பது வெள்ளி மதிப்பிலான இந்த உணவுக் கூடைகள் அரசி, மீகூன், மாவு, சமையல் எண்ணெய், மைலோ உள்ளிட்ட பொருள்களைக் கொண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

நேற்று 1,200 உணவுக் கூடைகள் விநியோகம் செய்யப்பட்ட வேளையில் இன்று மேலும் 1,500 கூடைகளை விநியோகம் செய்யவிருக்கிறோம் என்றார் அவர்.

கடந்த பிப்ரவரி மாதம் ஆரம்பிக்கப்பட்ட இந்த “ரெஸெக்கி காசே“ திட்டத்தின் கீழ் சுமார் பத்தாயிரம் உணவுக் கூடைகளை விநியோகம் செய்ய மாநகர் மன்றம் திட்டமிட்டுள்ளது.

 


Pengarang :