ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTNATIONALPBTSAINS & INOVASISELANGOR

காற்றுத் தூய்மைக்கேடு- தார் தயாரிப்பு ஆலையை மூட உத்தரவு

ஷா ஆலம், ஆக 28- காற்று மாசுபாடு காரணமாக செமினி, பண்டார் சன்வேயில் இயங்கி வந்த பிற்றுமென் எனப்படும் சாலைகளை அமைக்க பயன்படும் தார் கலவையை தயாரிக்கும் ஆலையை இரு வாரங்களுக்கு மூட உத்தரவிடப்பட்டுள்ளது.

அந்த தார் கலவையின் வாடை காற்றில் பரவுவதற்கு காரணமாக இருந்த காரணத்திற்காக அந்த ஆலையை மூடுவதற்கு உத்தரவு பிறப்பிக்கப்பட்டதாக சிலாங்கூர் மாநில சுற்றுச்சூழல் இலாகாவின் இயக்குநர் நோர் அஜிசா ஜாபர் கூறினார்.

காற்றுப் பரவல் தடுப்பு முறையை அந்த ஆலை நிர்வாகத்தினர் அமைக்காத காரணத்தால் சுற்றுவட்டாரத்தில் அந்த தார் வாடை பரவியதாக அவர் சொன்னார்.

1974 ஆம் ஆண்டு சுற்றுச்சூழல் தரச் சட்டத்தின் 38(1)(ஏ) பிரிவின் கீழ் அந்த ஆலையை மூடுவதற்கு உத்தரவிடப்பட்டது என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.

காற்று மாசுபாடு தடுப்பு நடவடிக்கைகளை அந்த ஆலை நிர்வாகத்தினர் மேற்கொள்வதற்கு ஏதுவாக இந்த இரு வார மூடல் உத்தரவு பிறப்பிக்கப்பட்டுள்ளது என்றார் அவர்.    


Pengarang :