ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

நாட்டில் 80 விழுக்காட்டினருக்கு தடுப்பூசி – இலக்கை அடைய 1.8 விழுக்காடு மட்டுமே எஞ்சியுள்ளது

ஜோகூர் பாரு, செப் 20– நாட்டிலுள்ள 80 விழுக்காட்டு பெரியவர்கள் முழுமையாக தடுப்பூசி பெற்றிருப்பதை உறுதி  செய்யும் இலக்கை அடைய இன்னும் 1.8 விழுக்காடு மட்டுமே எஞ்சியுள்ளது.

நேற்று முன்தினம் வரை நாட்டிலுள்ள பெரியவர்களில் 78.2 விழுக்காட்டினர் கோவிட்-19 தடுப்பூசியை முழுமையாகப் பெற்றுள்ளதாக அறிவியல், தொழில்நுட்ப மற்றும் புத்தாக்கத்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ டாக்டர் ஆடாம் பாபா கூறினார்.

தற்போது மாநிலங்களை  தாங்கள் இலக்காக கொண்டு செயல்பட்டுடு வருவதாக கூறிய அவர், இம்மாத இறுதிக்குள் குறைந்தது 60 விழுக்காட்டினர் தடுப்பூசியைப் பெற்றிருப்பதை தாங்கள் உறுதி செய்ய விரும்புவதாக சொன்னார்.

தடுப்பூசி செலுத்துவதில் குறைவான எண்ணிக்கையைப் பதிவு செய்த கிளந்தான், கெடா, பகாங், பேராக், சபா போன்ற மாநிலங்கள் மீது தீவிர கவனம் செலுத்தப்பட்டதைத் தொடர்ந்து அம்மாநிலங்களில் தடுப்பூசி பெறுவோர் எண்ணிக்கை அதிகரித்துள்ளதாக அவர் தெரிவித்தார்.

சரவா, லவுவான் மற்றும் சிலாங்கூர், கோலாலம்பூர், புத்ரா ஜெயாவை உள்ளடக்கிய கிள்ளான் பள்ளத்தாக்கில் தடுப்பூசி இயக்கம் சரியான இலக்கை நோக்கிச்  செல்வதாகவும் அவர் குறிப்பிட்டார்.

தடுப்பூசி செலுத்தும் இயக்கம் ஒரு போதும் மந்தமாக செயல்படாது எனக் கூறிய அவர், தடுப்பூசி பெறுவதிலிருந்து விடுபட்டவர்களை அடையாளம் காணும் நோக்கில் இந்த இயக்கம் தொடர்ந்து தீவிரமாக மேற்கொள்ளப்படும் என்றார்.

 


Pengarang :