ECONOMYNATIONALSELANGOR

வாகனமில்லா  தினம் திட்டம் ஷா ஆலமில் அடுத்த மாதம் அமல்

ஷா ஆலம், அக் 9- வாகனமில்லா தினம் திட்டம் ஷா ஆலம் நகரில் அடுத்த மாதம் மீண்டும் அமல்படுத்தப்படவுள்ளது. இத்திட்டம் ஆகக்கடைசியாக கடந்த 2020ஆம் ஆண்டு மார்ச் மாதம் இந்நகரில் அமல்படுத்தப்பட்டது.

கரியவிலவாயுவின் வெளியேற்றத்தைக் குறைத்து அரோக்கியமான வாழ்க்கை முறையை அமல்படுத்தும் நோக்கில் இத்திட்டம் மறுபடியும் அறிமுகப்படுத்தப்படுவதாக ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் துணை டத்தோ பண்டார் முகமது ரஷிடி ருஸ்லான் கூறினார்.

வரும் 2030 ஆம் ஆண்டிற்குள்  ஷா ஆலமை கார்பன் குறைந்த நகராக உருவாக்கும் திட்டத்திற்கே இத்திட்டம் அமைவதாகவும் அவர தெரிவித்தார்.

இம்முறை வாகனமில்லா தினம் திட்டம் கடுமையான எஸ்.ஒ.பி. விதிமுறைகளுடன் அமல்படுத்தப்படும்  என்று அவர் தெரிவித்தார்.

ஷா ஆலம் மாநகர் மன்றத்தின் 21 ஆம் ஆண்டு நிறைவையொட்டி டிவி சிலாங்கூரில் ஒளிபரப்பு செய்யப்பட்ட  கலந்துரையாடல் நிகழ்வில் அவர் இதனைக் கூறினார்.

கடந்த முறை வாகனமில்லா தினம் திட்டம் ஒவ்வொரு மாதம் இரண்டாவது ஞாயிற்றுக்கிழமை காலை 7.00 மணி முதல் இரவு 11.00 மணி வரை அமல்படுத்தப்பட்டது.

இந்த தினத்தில் ஓட்டப்பந்தயம், சைக்கிளோட்டம், சுவர் ஏறும் போட்டி உள்ளிட்ட நிகழ்வுகள் நடத்தப்பட்டன.


Pengarang :