ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

மலாக்கா மாநிலத் தேர்தலை ஒத்தி வைக்க அவசரகாலம் பிரகடனமா? அடுத்த வாரம் முடிவு

கோலாலம்பூர், அக் 9- மலாக்கா மாநிலத் தேர்தலை ஒத்தி வைப்பதற்காக அவசரகாலத்தைப் பிரகடனப்படுத்தும்படி பேரரசரின் பணிகளை கவனித்து வரும் துணை மாமன்னர் சுல்தான் அஸ்லான் ஷாவிடம் பரிந்துரைப்பதா என்பதை அரசாங்கம் அடுத்த வாரம் முடிவு செய்யும்.

இவ்விவகாரம் தொடர்பில் பல அரசு துறைகள் சுல்தான் அஸ்லான் ஷாவிடம் விளக்க  மளித்துள்ளதாக அரசாங்கத்திற்கு தெரியவந்துள்ளது என்று பிரதமர் டத்தோஸ்ரீ
இஸ்மாயில் சப்ரி யாக்கோப் கூறினார்.

மலாக்கா மாநிலம் குறித்து விவகாரம் அமைச்சரவைக் கூட்டத்தில் விவாதிக்கப்  பட்டதாகவும்   எனினும், அக்கூட்டத்தில் எந்த முடிவும் எட்டப்படவில்லை என்றும் அவர் தெரிவித்தார்.

இடைக்கால பேரரசர் சுல்தான் நஸ்ரின் ஷாவுக்கு சட்டத் துறை தலைவர், சுகாதார அமைச்சு  மற்றும் தேர்தல் ஆணையம் ஆகியத் தரப்பினர் சந்தித்துள்ளதாக எங்களிடம்
தெரிவிக்கப்பட்டது என்று அவர் குறிப்பிட்டார்.

சற்று பொறுத்திருங்கள். இவ்விவகாரம் தொடர்பில் அமைச்சரவை அடுத்த வாரம்
முடிவெடுக்கும் என்று மலேசிய குடும்ப திட்டத்தை தொடக்கி வைத்தப் பின்னர்
செய்தியாளர்களிடம் அவர் கூறினார்.

முதலமைச்சர் டத்தோஸ்ரீ சுலைமான் முகமது அலி சுலைமான் தலைமைத்துவம் மீது
நம்பிக்கை இழந்து விட்டதாக கூறி நான்கு சட்டன்ற உறுப்பினர்கள் ஆளும்
கூட்டணியிலிருந்து விலகியதைத் தொடர்ந்து மாநில சட்டமன்றம் கடந்த 4 ஆம் தேதி
கலைக்கப்பட்டது.


Pengarang :