ECONOMYHEALTHMEDIA STATEMENTNATIONAL

கோலக் கிள்ளான் தொகுதியில் திடீர் வெள்ளத்தை சமாளிக்க கால்வாய்கள் சீரமைப்பு

ஷா ஆலம், அக் 20- கோலக்  கிள்ளான் தொகுதியில் திடீர் வெள்ளப் பிரச்சனையை சமாளிக்க கால்வாய்களை சீரமைக்கும் பணி தொடர்ச்சியாக மேற்கொள்ளப்பட்டு வருகிறது.

வெள்ளம் அபாயம் அதிகம் உள்ள கம்போங் பெராஜூரிட், தாமான் செலாட் டாமாய், தாமான் தெலுக் காடோங் ஆகிய பகுதிகளில் கால்வாய் சீரமைப்பு பணிகளுக்கு முக்கியத்துவம் அளிக்கப்படுவதாக கோலக் கிள்ளான் சட்டமன்ற உறுப்பினர் அஸ்மிஸாம் ஜமான் ஹூரி கூறினார்.

கடல் பெருக்கை எதிர் கொள்வதற்கும் வட்டார மக்களின் பாதுகாப்பை உறுதி செய்வதற்கும் ஏதுவாக இந்த முன்னெச்சரிக்கை நடவடிக்கை மேற்கொள்ளப்படுகிறது என்று அவர் தெரிவித்தார்.

இயற்கையை நம்மால் தடுக்க முடியாது. ஆகவே மாநில வடிகால் மற்றும் நீர் பாசனத்துறை பொதுமக்களிடமிருந்து புகார்கள் வரும்வரை காத்திராமல் தொடர்ச்சியாக கால்வாய் சீரமைப்பு பணிகளை மேற்கொண்டு வருகிறது என்றார் அவர்.

இந்த சீரமைப்புப் பணிகள் காரணமாக கால்வாய்களில் அடைப்பு ஏற்படுவது தடுக்கப்பட்டு வெள்ள நீர் வீடுகளுக்குள் நுழைவது தவிர்க்கப்படும் என்று அவர் மேலும் சொன்னார்.

ஊராட்சி மன்றங்களும் தங்கள் அதிகாரத்திற்குட்பட்ட பகுதிகளில் இத்தகைய சோதனைகளை தொடர்ந்து மேற்கொண்டு வர வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தினார்.

 


Pengarang :