ECONOMYMEDIA STATEMENTPBTSELANGOR

2021 சிலாங்கூர் வேலை வாய்ப்பு சந்தையின் வழி 1,000க்கும் அதிகமானோர் பயனடைந்தனர்

ஷா ஆலம், 5 நவம்பர்: இந்த மாநிலத்தின் மொத்தம் 1,108 குடிமக்கள் இதுவரை சிலாங்கூர் 2021ம் ஆண்டு வேலை வாய்ப்பு சந்தையின் இரண்டு தொடர்களின் மூலம் பலன்களைப் பெற்றுள்ளனர்.

இது, இரண்டாவது நேர்முகத் தேர்விற்கு அழைக்கப்பட்ட மேலும் 513 பேர் தகுதி பெற்றிருந்த நிலையில், பணிக்கு ஏற்றுக் கொள்ளப்பட்ட 239 பங்கேற்பாளர்களை உள்ளடக்கியதாக டத்தோ மந்திரி புசார் கூறினார்.

“இந்தத் திட்டத்தில் கலந்துகொண்டு சிறப்பாகப் பயன் பெறுமாறு சிலாங்கூர் மக்களை மாநில அரசு அழைக்கிறது.

“ஜெலாஜா சிலாங்கூர் பெர்கர்ஜா” இன்னும் நான்கு இடங்களில் நடக்க உள்ளன. அவை சிலாங்கூரைச் சுற்றி நடக்கும்” என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி ஃபேஸ்புக் மூலம் கூறினார்.

ஆர்வமுள்ளவர்கள் சமீபத்திய தகவல்களுக்கு www.selangorbekerja.com.my ஐப் பார்வையிடலாம் என்றார். “நம்பிக்கையுடன், இந்த முயற்சி மக்களுக்கு வேலை கிடைக்கவும், அவர்களின் வாழ்க்கைத் தரத்தை மேலும் மேம்படுத்தவும் உதவும்,” என்று அவர் கூறினார்.

இதில் புரோட்டோன் Proton,   தோயோத்தா Assembly Services Sdn Bhd (UMW Toyota) மற்றும்  ஓல்டவூன் Oldtown Kopitiam ஆகியவை இந்த ஆட்சேர்ப்பு திட்டத்தில் பங்கேற்கும் நிறுவனங்களில் அடங்கும்.

சிலாங்கூர் வொர்க்கிங் டூவர் என்னும் வேலைவாய்ப்பு சந்தை நாளை உலு சிலாங்கூர் டேவான் மெர்டேகா, கோலக்குபூ பாருவில், நடைபெற உள்ளது.

உலு சிலாங்கூர் தவிர, நவம்பர் 20 அன்று டேவான் மெராந்தி, பயா ஜாராஸ், பெட்டாலிங் ஆகிய இடங்களில் தொடரும்.

சிலாங்கூர் ஓர்க்கிங் டூவர் முன்பு ஷா ஆலம் மற்றும் கோலா சிலாங்கூரில் அக்டோபர் 23 மற்றும் 30 ஆகிய தேதிகளில் நடைபெற்றது.


Pengarang :