ECONOMYMEDIA STATEMENTNATIONALPBTSELANGOR

கோல லங்காட் காகித தொழிற்சாலை மூலம்  வட்டார மக்களுக்கு  வேலை வாய்ப்பு- மந்திரி புசார்

 ஷா ஆலம், நவ 8- கோல லங்காட்டில் உலகின் மூன்று முன்னணி காகிதத் தயாரிப்பு நிறுவனங்கள் 400 வெள்ளி  முதலீட்டில் காகித தொழிற்சாலைகளை அமைக்கவுள்ளன. இத்திட்டங்களின் வாயிலாக உள்ளூர் மக்களுக்கு வேலை வாய்ப்பு கிடைக்கும் என்று மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின ஷாரி கூறினார்.

இரண்டு சீன நிறுவனங்கள் மற்றும் ஒரு ஜப்பானிய நிறுவனத்தின் முதலீட்டின் வழி  சுற்று வட்டார மக்களுக்கு வேலை வாய்ப்புகளை ஏற்படுத்துவதோடு சிலாங்கூர் உலக வரைபடத்தில்  இடம் பிடிக்கவும் செய்யும் என்று டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

தொழிற்சாலையின் கட்டுமானப் பணிகள்  அடுத்த ஆண்டு முதல் காலாண்டில் தொடங்கப்படும் எனக் கூறிய அவர்,    நடமாட்டக் கட்டுப்பாட்டு ஆணை காரணமாக இதன் பணிகள் சுணக்கம் கண்டிருந்தன என்றார். இங்குள்ள ஜூப்ளி பேராக் ஜூபிலி மண்டபத்தில் இன்று நடைபெற்ற அரசு ஊழியர்களின் மாதாந்திர சந்திப்பு கூட்டத்திற்குப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

பந்திங்கில் 32 மற்றும் 53 ஹெக்டர் பரப்பளவில் இந்த காகித ஆலைகள் கட்டப்படும் என்று என்று முதலீட்டுத் துறைக்கான ஆட்சிக்குழு உறுப்பினர் டத்தோ தெங் சாங் கிம் முன்னதாக கூறியிருந்தார்.


Pengarang :