ECONOMYMEDIA STATEMENTSELANGOR

செலாமாட்  தொலைபேசி ஆலோசக சேவை 10 புகார்களைப் பெற்றது

ஷா ஆலம், நவ 17- குடும்ப வன்முறை தொடர்பில் செலாமாட் எனப்படும் சிறப்பு தொலைபேசி அழைப்பின் வழி 10 புகார்கள் பெறப்பட்டன.

அவற்றில்  நான்கு குடும்பப் பிரச்சனைகளும் ஓரு சிறார் சித்தரவதையும் அடங்கும்  என்று சிலாங்கூர் மகளிர் செயலாக்க அமைப்பின் தலைமை செயல் முறை அதிகாரி சித்தி கமாரியா அகமது சுக்பி கூறினார்.

சிறார் சித்தரவதைப் புகார் காவல் துறையின் கவனத்திற்கு கொண்டுச் செல்லப்பட்ட வேளையில் எஞ்சிய புகார்கள் தொடர்பில் ஆலோசக சேவை வழங்கப்பட்டது என்று அவர் சொன்னார்.

திருமண வாழ்க்கையை காப்பாற்ற வேண்டும் என்று புகார்தாரர்கள்  விரும்பிய காரணத்தால் குடும்ப  விவகாரங்கள் ஆலோசகரின் கவனத்திற்கு கொண்டுச் செல்லபட்டன. அரசு துறைகள், தடுப்பூசி மற்றும் ஆலோசக சேவை குறித்து ஆறு புகார்கள் கிடைக்கப் பெற்றன என்றார் அவர்.

குடும்ப வன்முறை தொடர்பான பிரச்சனைகளை கையாளும் நோக்கில் இந்த தொலைபேசி ஆலோசக சேவை இம்மாதம் 3 ஆம் தேதி ஆரம்பிக்கப்ட்டது.

இத்திட்ட அமலாக்கத்திற்காக ஓரு லட்சம் வெள்ளி ஒதுக்கீட்டை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கித்தா சிலாங்கூர் 2.0 உதவித் தொகுப்பில் அறிவித்தார்.

Pengarang :