ALAM SEKITAR & CUACAECONOMYPBTSELANGOR

கம்போங் குவாந்தான் மின்மினிப் பூச்சி சரணாலயத்திற்கு  சிறப்பு நற்சான்று விருது

ஷா ஆலம், நவ 17- கோல சிலாங்கூர்  கம்போங் குவாந்தானுக்கு  சிறப்பு நற்சான்று விருது, 2021 ஆம் ஆண்டிற்கான ஆசியான் பிளேஸ்மேக்கர் விருதளிப்பை முன்னிட்டு பொது இடத்திற்கான சிறப்பு நற்சான்று விருது கம்போங் குவாந்தான், மின்மினிப் பூச்சிகள் சரணாலயத்திற்கு வழங்கப்பட்டுள்ளது.

இந்த விருது இம்மாதம் 10 ஆம் தேதி  இயங்கலை வாயிலாக நடைபெற்ற நிகழ்வின் போது வழங்கப்பட்டது.

இந்த விருது கிடைக்கும் வகையில் கம்போங் குவாந்தான் மின்மினிப் பூச்சிகள் சரணாலயத்தில் மேம்பாட்டுப் பணிகளை மேற்கொண்ட கோல சிலாங்கூர் நகராண்மைக் கழகத்தின் சிறப்பு திட்டக் குழுவுக்கு வாழ்த்துக்கள் என நகராண்மைக் கழகம் அறிக்கை ஒன்றில் கூறியது.

நகரங்களை வசீகரப்படுத்துவதில் கவனம் செலுத்தி வரும் நெக்ஸ்டோர் புரொப்பர்ட்டி கம்யூனிகேஷன்ஸ் நிறுவனத்தின் ஏற்பாட்டில் இந்த ஆசியான் பிளேஸ்மேக்கர் விருது வழங்கப்படுகிறது.

சிறந்த இடங்களை வர்த்தகமயமாக்குவது மற்றும் தென்கிழக்காசிய நாடுகளில் அந்த இடங்களுக்கு அங்கீகாரத்தைப் பெற்றுத் தருவது போன்ற நடவடிக்கைகளில் இந்த நிறுவனம் ஈடுபட்டு வருகிறது.


Pengarang :