ECONOMYMEDIA STATEMENTNATIONALPENDIDIKANSELANGOR

கோல சிலாங்கூர் மாவட்டத்தில் வர்த்தக உரிமத்தை புதுப்பிப்பதற்கான கால அவகாசம் நீட்டிப்பு

ஷா ஆலம், ஜன 11- வர்த்தக உரிமத்தை புதுப்பிப்பதற்கான காலக் கெடுவை கோல சிலாங்கூர் நகராண்மைக் கழகம் வரும் ஜனவரி 31 ஆம் தேதி வரை நீட்டித்துள்ளது.

இதற்கான விண்ணப்பத்தை எனும் கோல சிலாங்கூர் விவேக கட்டண சேவை முறையின் வாயிலாக செய்யலாம் என்று நகராண்மைக் கழகத் தலைவர் ரஹிலா ரஹ்மாட் கூறினார்.

வர்த்தக உரிமத்தை புதுப்பிப்பதற்கான காலக் கெடு கடந்த டிசம்பர் மாதம் 31 ஆம் தேதியுடன் முடிவுக்கு வந்த போதிலும கடந்த மாதம் ஏற்பட்ட வெள்ளம் காரணமாக பொது மக்களுக்கு ஏற்பட்ட சிரமங்களைக் கருத்தில் கொண்டு காலக் கெடு நீட்டிக்கப்பட்டுள்ளதாக அவர் சொன்னார்.

கடந்த டிசம்பர் மாதம் ஏற்பட்ட வெள்ளத்தில் பொது மக்களுக்கு ஏற்பட்டுள்ள சிரமங்களை நாங்கள் உணர்ந்துள்ளோம். இதனை கருத்தில் கொண்டு வர்த்தக உரிமத்தை புதுப்பிப்பதற்கான காலக் கெடுவை நீட்டித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.

 


Pengarang :