ECONOMYMEDIA STATEMENTNATIONAL

“நாடி“ திட்டத்தின் கீழ் வர்த்கத்தில் ஈடுபட 1,476 மகளிருக்கு வாய்ப்பு

ஷா ஆலம், ஜன 15- ஸ்கிம் டாருள் ஏசான் (நாடி) எனும் வர்த்தக உதவித் திட்டத்தின் வழி மாநிலத்திலுள்ள 1,476 மகளிர் வியாபாரத்தில் ஈடுபடுவதற்குரிய வாய்ப்பினை பெற்றுள்ளனர்.

இத்திட்டத்தில் பங்கு கொண்ட மகளிருக்கு  60 லட்சத்து 70 ஆயிரம் வெள்ளி கடனாக வழஙகப்பட்டுள்ளதாக மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி கூறினார்.

எளிதாக, விரைவாக மற்றும் சுமையில்லாத வகையில் மகளிர் வர்த்தகத்தை தொடங்குவதற்கு இத்திட்டம் பெரிதும் துணை புரிவதாக  பேஸ்புக் பக்கத்தில் அவர் வெளியிட்ட விளக்கப்படத்தில் குறிப்பிடப்பட்டுள்ளது.

மாநிலத்திலுள்ள அனைத்து இன மகளிருக்கும் இத்திட்டத்தின் கீழ் வர்த்தக வாய்ப்பு வழங்கப்படுகிறது. ஆர்வமுள்ளோர் www.hijrahselangor.com என்ற அகப்பக்கம் வாயிலாக அல்லது சிலாங்கூரிலுள்ள 20 ஹிஜ்ரா கிளைகளில் உள்ள அதிகாரிகளை தொடர்பு கொள்ளலாம்.


Pengarang :