ALAM SEKITAR & CUACAECONOMYNATIONAL

முழுமையாக தடுப்பூசி போட்ட 12,604 நபர்கள் தடுப்பூசி சான்றிதழ் பெறவில்லை

ஷா ஆலம், மார்ச் 18: சிலாங்கூர் தடுப்பூசி (செல்வேக்ஸ்) திட்டத்தின் மூலம் இரண்டு டோஸ் தடுப்பூசிகளை முடித்த 12,604 நபர்கள் இன்னும் மைசெஜாத்ரா தடுப்பூசி சான்றிதழைப் பெறவில்லை.

பொது சுகாதார ஆட்சிக்குழு உறுப்பினர் டாக்டர் சித்தி மரியா மாமுட், இந்தத் தொகை மார்ச் 14 வரை பாதுகாப்பான நுழைவு (செலங்கா) தரவுதளத்திலிருந்து பெறப்பட்டது என்றார்.

மொத்தம் 664,354 தனிநபர்கள் அல்லது 97.24 விழுக்காட்டில் 12,694 பேர் அல்லது 1.84 விழுக்காட்டினர் சான்றிதழைப் பெற்றனர் என்று அவர் கூறினார். “இன்னும் சான்றிதழைப் பெறாதவர்கள், மைசெஜாத்ரா ஹெல்ப்டெஸ்க் மூலம் சம்பந்தப்பட்ட நபர் தொடர்பு கொள்ளலாம்,” என்று அவர் கூறினார்.

இன்று சிலாங்கூர் மாநில சட்டமன்றத்தின் (டிஎன்எஸ்) நிறைவு அமர்வில் சித்தி மரியா இவ்வாறு கூறினார்.

செலங்கா மற்றும் மைசெஜாத்ராவில் பதிவு செய்யும் போது பயன்படுத்தப்படும் அடையாள அட்டை எண்கள் அல்லது தொலைபேசி எண்கள் போன்ற அடையாள ஆவணங்களின் தகவல்களில் உள்ள வேறுபாடுகள் தாமதமாகும் காரணிகளில் ஒன்றாகும் என்று அவர் கூறினார்.

” செல்வேக்ஸ் பெறுநர்களுக்கான ஒவ்வொரு மைசெஜாத்ரா சான்றிதழிற்கும் விதிக்கப்படும் கட்டணங்கள் குறித்து, மைசெஜாத்ரா விண்ணப்பத்தின் உரிமையாளர்களுக்கும் சிலாங்கூர் மாநில பொது சுகாதார நிலைக்குழுவிற்கும் இடையே இந்த விஷயத்தைச் செம்மைப்படுத்த ஒரு கூடுதல் விவாதம் நடத்தப்படும்” என்று அவர் கூறினார்.

தடுப்பூசி சான்றிதழைப் பெறுவதில் தாமதம் மற்றும் ஒவ்வொரு சான்றிதழுக்கும் விதிக்கப்பட்ட கட்டணங்கள் குறித்து பண்டார் உத்தாமா சட்டமன்ற உறுப்பினர், ஜமாலியா ஜமாலுடின் எழுப்பிய பிரச்சினைக்கு பதிலளிக்க அவர் இவ்வாறு கூறினார்.


Pengarang :