ECONOMYSELANGOR

மலிவு விற்பனைத் திட்டதை நோன்புப் பெருநாளுக்குப் பின்னரும் தொடர பி.கே.பி.எஸ். திட்டம்

சுபாங் ஜெயா, ஏப் 23- சிலாங்கூர் அரசின் மலிவு விற்பனைத் திட்டத்திற்கு பொது மக்கள் மத்தியில் அமோக ஆதரவு கிடைத்து வருவதைத் தொடர்ந்து அத்திட்டத்தை  நோன்புப் பெருநாளுக்குப் பின்னரும் தொடர சிலாங்கூர் விவசாய மேம்பாட்டுக் கழகம் (பி.கே.பி.எஸ்.) திட்டமிட்டுள்ளது.

எனினும், மாநில அரசின் முடிவைப் பொறுத்து இத்திட்டத்தின் அமலாக்கம் அமையும் என்று பி.கே.பி.எஸ். தலைமை செயல் முறை அதிகாரி டாக்டர் முகமது கைரில் முகமது கூறினார்.

பொது மக்களின் சுமையைக் குறைக்கும் நோக்கிலான இத்திட்டத்தை நோன்புப் பெருநாள் வரை மட்டுமே தொடர தற்போதைக்கு முடிவெடுக்கப்பட்டுள்ளது  என்றார் அவர்.

நேற்று  இங்கு நடைபெற்ற ஊடகவியலாளர்களுடனான நோன்பு துறப்பு நிகழ்வில் கலந்து கொண்டப் பின்னர் செய்தியாளர்களிடம் அவர் இதனைத் தெரிவித்தார்.

பொருள் விலையேற்றம் காரணமாக சிரமத்தை எதிர்நோக்கி வரும் மக்களுக்கு உதவும் நோக்கில் மாநிலத்தின் 64 இடங்களில் இந்த மலிவு விற்பனைத் திட்டத்தை மாநில அரசு கடந்த பிப்ரவரி 27 ஆம் தேதி தொடங்கி மேற்கொண்டு வருகிறது.


Pengarang :