ECONOMYSELANGOR

பெர்மாத்தாங் தொகுதியில் மலிவு விற்பனை- 30 நிமிடங்களில் அனைத்து பொருள்களும் விற்றுத் தீர்ந்தன

கோல சிலாங்கூர், ஏப் 23- பெர்மாத்தாங் தொகுதியில் இன்று நடைபெற்ற மக்கள் பரிவு விற்பனைத் திட்டத்தின் போது முப்பதே நிமிடங்களில் அனைத்து பொருள்களும் விற்றுத் தீர்ந்தன.

இங்கு விற்பனைக்காக தயார் செய்யப்பட்டிருந்த 500 கோழிகள், 500 தட்டு முட்டைகள், 50 கிலோ இறைச்சி, காய்கறிகள் மற்றும் சமையல் எண்ணெய் ஆகியவை  வர்த்தக நேரம் முடிவடைவதற்கு முன்னதாகவே விற்கப்பட்டு விட்டதாக பி.கே.பி.எஸ். எனப்படும் சிலாங்கூர் மாநில விவசாய மேம்பாட்டுக் கழகத்தின் வர்த்தக நிர்வாகி இஸ்ஸூல் ஹம்சா கூறினார்.

இந்த விற்பனை காலை 10.00 மணிக்கு தொடங்கி பிற்பகல் 1.00 மணிக்கு முடிவடைவதாக இருந்தது. மலிவு விலையில் உணவுப் பொருள்களை விற்கும் இத்திட்டத்திற்கு பொது மக்கள் மத்தியில் அமோக ஆதரவு கிடைத்த காரணத்தால் முன்கூட்டியே அப்பொருள்கள் விற்கப்பட்டு விட்டன என்றார் அவர்.

விற்பனை தொடங்கிய ஒன்றரை மணி நேரத்தில் ஏறக்குறைய 70 விழுக்காட்டு பொருள்கள் விற்கப்பட்டுவிட்டன. கோழி, முட்டை, இறைச்சி ஆகியவை பொருள்களுக்கு அதிக வரவேற்பு இருந்தது என்று அவர் மேலும் சொன்னார்.

இந்த மலிவு விற்பனைத் திட்டத்தை பெரிதும் வரவேற்ற பொது மக்கள் மறுபடியும் இத்திட்டத்தை இங்கு நடத்தும்படி கேட்டுக் கொண்டனர். எனினும் நாங்கள் இப்போது நோன்புப் பெருநாளை முன்னிட்டு மாத இறுதியில் நடத்தப்படவிருக்கும் மாபெரும் மலிவு விற்பனையில் கவனம் செலுத்தி வருகிறோம் என்று அவர் மேலும் குறிப்பிட்டார்.


Pengarang :