ECONOMYMEDIA STATEMENT

பேபி ஷைபாவின் மரண விசாரணை செப்டம்பர் 22 ஆம் தேதி தொடங்கும்

சிரம்பான், ஜூன் 29– பண்டார் ஸ்ரீ செண்டாயானில் உள்ள குழந்தை காப்பகம் ஒன்றின் பராமரிப்பில் இருந்த போது நோர் ரனியா அஷிபா யூஸ்ரி என்ற பதினைந்து மாத குழந்தைக்கு ஏற்பட்ட காரணத்தை கண்டறிவதற்கான விசாரணை இங்குள்ள மரண விசாரணை நீதிமன்றத்தில் வரும் செப்டம்பர் 22 ஆம் தேதி நடைபெறவுள்ளது.

இன்று நீதிபதி ருஷான் முகமது முன்னிலையில் இந்த வழக்கு விசாரணைக்கு வந்த போது மரண விசாரணைக்கு வரும் நவம்பர் 10 மற்றும் 17 ஆம் தேதிகளை அவர் நிர்ணயித்தார்.

இந்த வழக்கு தொடர்பில் அக்குழந்தையின் தந்தை யுசேரி யூசுப் நீதிமன்றத்தின் பணிகளில் குறுக்கீடு செய்யக்கூடிய எந்த தகவலையும் சமூக ஊடகங்களில் பகிர்வதற்கு எதிராக இடைக்கால தடை விதிக்க வேண்டும் என்று இந்த மரண விசாரணையை நடத்தும் துணை பப்ளிக் புரோசிகியூட்டர் ஹூஸ்னி  பைரோஸ் ரம்லி நீதிமன்றத்தைக் கேட்டுக் கொண்டார்.

மேலும் இந்த விசாரணை சீராக  நடைபெறுவதை வழக்கறிஞர்களும் போலீசாரும் உறுதி செய்ய வேண்டும் என அவர் வலியுறுத்தினார்.

அவரது  கோரிக்கையை ஏற்றுக் கொண்ட நீதிபதி இந்த கோரிக்கை எழுத்துப்பூர்வமாக முன்வைக்கப்படும் வரை இடைக்கால தடை விதிப்பதாக கூறினார்.


Pengarang :