Ahli Dewan Negeri (ADN) Sentosa, G.Gunarajah bercakap kepada media ketika Majlis rumah terbuka Ahli Dewan Negeri (ADN) Sentosa, sempena sambutan perayaan Deepavali di Bandar Country Homes, Rawang pada 4 November 2021. HAFIZ OTHMAN/SELANGORKINI
ECONOMYMEDIA STATEMENTNATIONAL

நாட்டை ஒழுங்காக வழிநடத்த தவறுபவர்களா தலைவர்கள்? அவர்களின் ஊதியத்தை குறைக்க வேண்டும்- டாக்டர். ஜி.குணராஜ் ஆவேசம்

ஷா ஆலம் 30 ஜூன்-  உள்நாட்டு வர்த்தகம் மற்றும் பயனீட்டாளர் விவகார அமைச்சர் (KPDNHEP), டத்தோஸ்ரீ அலெக்சாண்டர் நந்தா லிங்கி, கடந்த வாரம், போத்தலில் அடைக்கப்பட்ட இரண்டு முதல் ஐந்து கிலோகிராம்  சமையல் எண்ணெய்,  கோழி மற்றும் கோழி முட்டைகளுக்கு அரசாங்க  உதவி தொகை  ரத்து செய்து , சந்தை விலைக்கு ஏற்ப அப்பொருட்கள் விற்பனை செய்வதை  அறிவித்தார்.

நேற்று, பிரதமர் டத்தோஸ்ரீ இஸ்மாயில் சப்ரி யாக்கோப், அதிகரித்து வரும் வாழ்க்கைச் செலவு சவாலை எதிர்கொள்ள, பணவீக்கத்தை சமாளிக்க ஜிகாத் சிறப்புக் குழுவின் தலைவர் டான்ஸ்ரீ அன்வர் மூசாவை நியமிப்பதாக அறிவித்துள்ளார்.

இதில் வேடிக்கை என்னவென்றால், கடந்த ஆண்டு முதல் பொருளாதார வல்லுநர்கள் 2022 ஆம் ஆண்டின் நடுப்பகுதியில் பணவீக்கம் கடுமையாக உயரும் என்று எச்சரித்திருந்தார்கள்  ஆனால்  அதனை எதிர்கொள்ள   அரசாங்கம்  எந்த ஏற்பாடும் இன்றி இருந்தது  ஏன்  என செந்தோசா தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சிலாங்கூர்  மந்திரி புசாரின் இந்தியச் சமூகத்திற்கான சிறப்பு பிரதிநிதியுமான டாக்டர் குணராஜ் ஜோர்ஜ் கேள்வி எழுப்பினார்.

ஆனால் பணவீக்கத்தை சமாளிக்க அரசாங்கம், எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை, உணவு பொருட்களின் உற்பத்திகளை பெருக்கவும், திட்டமிடவில்லை. ஆனால் மக்களும், மாணவர்களும் , எதிர்க்கட்சியினரும் வீதி போராட்டங்களுக்கு தயாரானவுடன், அவசரமாக  இப்போது  ஒரு சிறப்பு குழுவை உருவாக்கியுள்ளதாக அறிவித்துள்ளார்.

 அமைச்சர் விலை உயர்வுக்கு அறிவித்த பின், பிரதமரே, அதை மறுப்பதும், தற்காலிக அறிவிப்புகள் விட்டுள்ளார்.  ஆனால் உண்மையில் மாற்று ஏற்பாடுகளுக்கு செயல் பாடுகள் இன்றி  நாடு  இருப்பது, நாடு ஒரு கடுமையான, நெருக்கடியில் சிக்கி உள்ளதை உணர்த்துகிறது.

இவ்வேளையில் இக்கட்டுகளை சமாளிக்க ஆக்ககரமாக செயல்பட வேண்டிய அமைச்சர்கள் ஆளுக்கு ஒரு அறிக்கை விடுவதும்,மக்கள் உணவுக்காக போராடும்,   இவ்வேளையில்  அம்னோ எம்.பி.க்கள் அதிகாரத்துக்காக, சிண்டு பிடியில் ஈடு பட்டுள்ளார்கள். அவர்கள் முக்கியமாக  உணரவேண்டியது பொதுவாக, பொருட்கள்  அல்லது  உணவு பொருட்களின் விலை உயர்ந்தால், குறைப்பது கடினம்.  ஆகவே அதை தொடர்ந்து கண்காணிக்க வேன்டும்.  ஆனால் அமைச்சர்களுக்கு  அதற்கு நேரமில்லை. அப்படிப்பட்ட  சூழ்நிலையில் நாடு உள்ளது,.

இது நாடு மிக ஆபத்தான கால கட்டத்தில் உள்ளது, தலைமைத்துவமின்றி போய்க் கொண்டிருப்பதை காட்டுகிறது அதை மக்கள் உணர்ந்திருக்கலாம்.

நாட்டின் பொருளாதார நெருக்கடியை உடனடியாக தீர்க்க அரசாங்கம் தவறினால், பிரதமர், அமைச்சர்கள் மற்றும் பிரதிநிதிகளின் மாதாந்திர சம்பளத்தை குறைக்க வேண்டும் என்றும் நான் பரிந்துரைக்கிறேன். இது நியாயமானது, ஏனெனில், அதிகாரம் பெற்ற ஒரு தலைவராக அவர் கீழ் நிலையில் பாதிக்கப்பட்ட மக்களின் தலைவிதியை பாதுகாக்கத் தவறிவிட்டார்கள் என குற்றம் சாட்டினார்  செந்தோசா தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சிலாங்கூர்  மந்திரி புசாரின் இந்தியச் சமூகத்திற்கான சிறப்பு பிரதிநிதியுமான டாக்டர் குணராஜ் ஜோர்ஜ்.


Pengarang :