ECONOMYMEDIA STATEMENT

எட்டு வாகனங்கள், 21 சைக்கிள்கள் சம்பந்தப்பட்ட விபத்தில் பெண் பலி

பாசிர் புத்தே, ஜூலை 15: இங்குள்ள ஜாலான் கமுண்டிங் என்ற இடத்தில் மணல் மற்றும் இரும்பு ஏற்றிச் சென்ற இரண்டு லாரிகள் மற்றும் 21 சைக்கிள்கள் மோதிய விபத்தில் பெண் ஒருவர் உயிரிழந்தார், ஒரு குழந்தை உட்பட 4 பேர் காயமடைந்தனர்.

பாசிர் புத்தே தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தின் (பிபிபி) தலைவர் அசார் எல்மி  முஸ்டோபர் கூறுகையில், நேற்று காலை 9.05 மணியளவில்  நடந்த இந்தச் சம்பவத்தில் இரும்பு ஏற்றிச் சென்ற லாரி மற்றொரு வாகனத்தின் மீது மோதுவதற்கு முன்பு கவிழ்ந்தது.

மணல் மற்றும் இரும்பு ஏற்றப்பட்ட இரண்டு லாரிகள், 21 சைக்கிள்கள், ஒரு தொயோத்தா  ஃபார்ச்சூனர் ஸ்போர்ட்ஸ் யூட்டிலிட்டி வாகனம் (எஸ்யூவி), மூன்று கார்கள் மற்றும் இரண்டு  மோட்டார் சைக்கிள்கள் ஆகியவை விபத்தில் சம்பந்தப்பட்ட வாகனங்கள்.

“பாசிர் புத்தே மற்றும் தொக் பாலி தீயணைப்பு மற்றும் மீட்பு நிலையத்தைச் சேர்ந்த 13 உறுப்பினர்கள் மற்றும் அதிகாரிகள் விபத்து பற்றிய அழைப்பைப் பெற்றவுடன் சம்பவ இடத்துக்கு விரைந்தனர். விபத்தில் ஒரு இளம் பெண் இறந்து விட்டார், ஒரு குழந்தை பலத்த காயமடைந்த வேளையில் மேலும் மூன்று பேர் லேசான காயம் அடைந்துள்ளனர்.

பாதிக்கப்பட்ட அனைவரும் தெங்கு அனிஸ் பாசிர் புத்தே மருத்துவமனைக்கு கொண்டு செல்லப்பட்டதாக அவர் கூறினார்.


Pengarang :