ALAM SEKITAR & CUACAECONOMYMEDIA STATEMENTSELANGOR

சிலாங்கூர் பாண்டான் தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் பொதுக்கூட்டம்

ஷா ஆலம் , ஆகஸ்ட் 12 சிலாங்கூர் பாண்டான் தொகுதியில் பக்காத்தான் ஹராப்பான் பொதுக்கூட்டம்  எதிர்வரும் 14-8-2022 ஞாயிற்றுக்கிழமை  பிற்பகல் 1.30 மணிக்கு எம்.பி.ஏஜே என்னும் அம்பாங் நகராட்சி ஆடிட்டோரியத்தில்  நடைபெறும் என்று தலைமை ஏற்பாட்டு ஒருங்கிணைப்பாளர் திரு. ராஜேந்திரன் ராசப்பன் தெரிவித்தார்..

இந்நிகழ்வில் ஈப்போ பாராட் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு குலசேகரன், கிள்ளான் நாடாளுமன்ற உறுப்பினர் மாண்புமிகு சார்ல்ஸ் சந்தியாகோ, செந்தோசா தொகுதி சட்டமன்ற உறுப்பினரும், சிலாங்கூர் மந்திரி புசாரின் சிறப்பு பிரதிநிதியுமான டாக்டர் குணராஜ் ஜோர்ஜ், மற்றும் பலர் உரை நிகழ்த்தவுள்ளனர்.

இந்நிகழ்வில் சிலாங்கூர் மாநில அரசின் மக்கள் நலத் திட்டங்களான ஹிஜ்ரா என்னும் சிறு கடன் மற்றும் வணிகப் பொருள் உதவி, பிங்காஸ் என்னும் குறைந்த வருமானமுடைய தாய்மார்கள் உதவி மற்றும் நேசிப்பு திட்டம், இல்திசம் சிலாங்கூர் என்னும்  சிலாங்கூர் சுகாதார மற்றும் கல்வி உதவித் திட்டம், பிள்ளைகள் சத்துணவு மற்றும் இலவசக் குடிநீர் திட்டங்களுக்கு விளக்கமளிப்பும், பதிவும் நடைபெறும்.

மாநில அரசின் திட்டங்களில் மக்கள் பங்கு கொண்டு பயன் பெற இந்த வாய்ப்பை பாண்டான் சுற்றுவட்டார மக்கள் நன்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும் என ஏற்பாட்டுக் குழுவினர் எதிர்பார்ப்பதாகக் கூறினார் திரு. ராஜேந்திரன் ராசப்பன்


Pengarang :