ECONOMYSELANGOR

மதிப்பீட்டு வரியைச் செலுத்தத் தவறிய 2,651 பேரின் சொத்துகள் பறிமுதல்- எம்பி.எஸ். நடவடிக்கை

ஷா ஆலம், செப் 29– தடுத்து வைப்பு ஆணை பிறக்கப்பட்ட ஏழு நாட்களுக்குள் மதிப்பீட்டு வரி பாக்கியை செலுத்தத் தவறிய 2,651 உரிமையாளர்களின் சொத்துக்களை செலாயாங் நகராண்மைக் கழகம் (எம்.பி.எஸ்.) பறிமுதல் செய்தது.

கடந்த  ஆகஸ்டு 31 வரை  ஒப்படைக்கப்பட்ட ஆணைகளின் அடிப்படையில் ஒவ்வொரு வாரமும் உரிமையாளர்களின் சொத்துக்களை பறிமுதல் செய்வதற்கான நடவடிக்கைகள் மேற்கொள்ளப்பட்டு வருகிறது என்று நகராண்மைக் கழகத் தலைவர் முகமது யாஷிட் சாய்ரி கூறினார்.

தடுத்து வைப்பு ஆணையை சமர்ப்பிக்கும் காலம் கடந்த முடிவடைந்த பிறகு கடந்த ஜூலை 1 முதல் கைது அசையும் சொத்துக்களை சீல் வைக்கும் அல்லது பறிமுதல் செய்யும் நடவடிக்கைத் தொடங்கப்பட்டது என்று அவர் சொன்னார்.

வளாகத்தில் உள்ள அசையும் சொத்துக்களை பறிமுதல் செய்ய நடவடிக்கை எடுப்போம் என்று நகராண்மைக் கழகத்தின் இவ்வாண்டிற்கான ஒன்பதாவது கூட்டத்திற்கு தலைமையேற்ற போது அவர் கூறினார்.

பறிமுதல் மற்றும் ஏல நடவடிக்கைகளுக்கு ஆளாகாமல் இருக்க மதிப்பீட்டு வரி பாக்கியை விரைந்து செலுத்துமாறு பொதுமக்களுக்கு அவர் நினைவூட்டினார்.

மதிப்பீடு செய்யப்பட்ட வரி நிலுவைத் தொகையை முழுமையாக அல்லது தவணை முறையில் செலுத்த முன்வருவோருக்கு தடுப்பு ஆணையை குறைப்பதற்கு பரிசீலிக்கத் தயாராக உள்ளோம் என்று அவர் மேலும் தெரிவித்தார்.

இதற்கிடையில், கிராமப் பகுதிகள் மற்றும் வரி விலக்கு பெறும் குறைந்த விலை குடியிருப்பு பகுதிகளில் மதிப்பீட்டு வரி பாக்கியைச் செலுத்துவதை ஊக்குவிக்கும் பிரச்சாரத்தை தமது தரப்பு இன்னும் தொடர்கிறது என்று முகமட் யாஷிட் குறிப்பிட்டார்.

பாக்கி வைத்திருக்கும் உரிமையாளர்கள் முழுத் தொகையையும் செலுத்த வேண்டும் அதன் பின்னர் அவர்களுக்கு எதிரான ஆணை ரத்து செய்யப்படும் என்பதோடு டிசம்பர் 31 க்கு முன் 100 சதவீதம் கட்டணம் வசூலிக்கப்படும் என்றார் அவர்.


Pengarang :