ECONOMYHEALTHMEDIA STATEMENTPBT

உலு சிலாங்கூரில் கடந்த வாரம் 28 டிங்கி சம்பவங்கள் பதிவு

உலு சிலாங்கூர், நவ 22- உலு சிலாங்கூர் மாவட்டத்தில் செப்டம்பர் 13 முதல் 19 வரையிலான 46வது நோய்த் தொற்று வாரத்தில் புதிதாக 28 டிங்கி காய்ச்சல் சம்பவங்கள் பதிவாகியுள்ளன. இதனுடன் சேர்த்து அந்த மாவட்டத்தில் டிங்கி பாதிப்புக்குள்ளானவர்களின் எண்ணிக்கை 593 ஆக உயர்வு கண்டுள்ளது.

புக்கிட் செந்தோசா, ஸ்ரீ துலிப் அடுக்குமாடி குடியிருப்பு பகுதியில் மிக அதிகமாக அதாவது ஏழு சம்பவங்கள் பதிவாகியுள்ளன என்று மாவட்ட சுகாதார அலுவலகம் தனது பேஸ்புக் பதிவில் கூறியது.

பத்தாங் காலி பகுதியில் 46 டிங்கி சம்பவங்கள் அடையாளம் காணப்பட்டதைத் தொடர்ந்து அப்பகுதி நோய் ‘வெப்பத் திட்டு‘ பகுதியாக வகைப்படுத்தப்பட்டுள்ளதாக அது தெரிவித்தது.

புக்கிட் பெருந்தோங் அப்பார்ட்மெண்ட் டாலியா பகுதியும் 10 டிங்கி சம்பவங்களுடன் டிங்கி பரவல் இடமாக வகைப்படுத்தப்பட்டுள்ளது.

கடந்த 44வது நோய்த் தொற்று வாரத்துடன் ஒப்பிடுகையில் இவ்வாரம் நோயினால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை சற்று குறைந்துள்ள போதிலும் டிங்கி பரவலுக்கு எதிராக மிகுந்த விழிப்புடன் இருக்கும்படி வட்டார மக்கள் கேட்டுக் கொள்ளப்பட்டுள்ளனர்.

காய்ச்சலுக்கான அறிகுறி தென்படும் பட்சத்தில் உடனடியாக அருகிலுள்ள சுகாதார மையங்களில் சிகிச்சை பெறும்படியும் மாவட்ட சுகாதார அலுவலம் பொது மக்களை வலியுறுத்தியுள்ளது.


Pengarang :