ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மாநில வேலைவாய்ப்பு சந்தை 30,000 க்கும் மேற்பட்ட காலியிடம், பெரிய வருமான  வாய்ப்பு

ஷா ஆலம்  டிச 11: செர்டாங்கில் உள்ள மலேசியன் வேளாண்மை எக்ஸ்போ பார்க்கில் (மேப்ஸ்) நடைபெறும்  சிலாங்கூர் மெகா வேலைவாய்ப்பு கார்னிவலின்  2022 இன் இரண்டாவது தொடரைப் பார்வையிடும் வாய்ப்பை மூன்று குழந்தைகளின் தாய் தவறவிடவில்லை.

சஃபியா அரிபின், 33, தனது கணவர் மற்றும் மகனுடன் புத்ரா ஜெயாவில் இருந்து இங்கு வந்தார், ஏனெனில் அவர் தனது வேலை ஒப்பந்தம் முடிவடைந்ததை தொடர்ந்து ஒரு புதிய வேலையைத் தேடுவதில்  தனது அதிர்ஷ்டத்தை  சோதிக்க விரும்பினார்.

“மாநில அரசால் ஏற்பாடு செய்யப்பட்ட இந்தச் சந்தை மிகவும் சிறப்பாகவும் பயனுள்ளதாகவும் இருக்கிறது, ஏனெனில் இங்கு பல நிறுவனங்கள் இருப்பதால் ஆன்லைனில் செல்லாமல் நேரடியாக சந்தித்து விண்ணப்பங்களை வழங்கலாம்.

“MAEPS இல் பார்க்கிங் எளிதாகக் கிடைக்கிறது, மற்றும் இங்குள்ள பகுதி விசாலமானது, நாம் கூட்ட நெருக்கடிகளை  எதிர் நோக்க வேண்டியதில்லை. எனவே வேலைத் தேடும் பெற்றோர்கள் குழந்தைகளுடன் வந்தாலும்  சிரமம் இல்லை ” என்று ஊடகவியலாளர்களை சந்தித்த போது கூறினார்.

இதற்கிடையில், கிள்ளானைச் சேர்ந்த முஹம்மது சியாஸ்வான் ரஹாடி, 28, அவர் தனது தற்போதைய வாழ்க்கையை ஒப்பிடும்போது  தற்போதைய கால நிலைக்கு ஏற்ப வருமானம்  கிடைக்கும்  தொழிலைத் தேடி வந்ததாகவும், அது நிலையானதாக  இருக்க வேண்டும்  என்ற எதிர்பார்ப்பை வெளியிட்டார்.

“இப்போது தான் சில்லறை வணிகத் துறையில் பகுதி நேரமாக வேலைச் செய்வதாகவும், அது தனக்கு உத்தரவாதம் இல்லை என்று உணர்வதாகக் கூறினார்.

“மாநில அரசு ஏற்பாடு செய்துள்ள  வேலைவாய்ப்பு சந்தையில்  முதல்முறையாகப் பங்கேற்கிறேன், இதுவரை தான் மூன்று  நிறுவனங்களிடம்  நேர்காணலுக்குச் சென்றுள்ளதாகவும் (இங்கே) வாழ்வாதாரம் கிடைக்கும் என்று நம்புகிறேன்,” என்று அவர் கூறினார்.

சிலாங்கூர் மெகா வேலைவாய்ப்பு கார்னிவலின்  2022 இன் இரண்டாவது தொடர்  நேற்று தொடங்கி இரண்டு நாட்களுக்கு 300 புகழ்பெற்ற நிறுவனங்களை உள்ளடக்கிய பல்வேறு துறைகளில் 30,000 க்கும் மேற்பட்ட வேலை வாய்ப்புகளை வழங்குகிறது.

சம்பந்தப்பட்ட நிறுவனங்கள் பெருசாஹான் ஓட்டோமொபில் நேஷனல் (புரோட்டான்), போஸ் மலேசியா, பிரசரானா, புஞ்சாக் நியாகா ஹோல்டிங்ஸ், ஸ்டார்பக்ஸ், கெந்திங் மலேசியா மற்றும் அரசு நிறுவனங்கள் மற்றும் மாநில அரசு துணை நிறுவனங்கள்.

சிலாங்கூர் மக்கள், குறிப்பாக இளைஞர்கள், www.selangorjobportal.com.my இல் பதிவுசெய்து அல்லது காலை 9 மணி முதல் மாலை 5.30 மணி வரை நேரடியாக கலந்து கொள்வதன் மூலம் வழங்கப்படும் வாய்ப்புகளை பயன்படுத்திக் கொள்ள ஊக்குவிக்கப்படுகிறார்கள்.


Pengarang :