NATIONAL

நாட்டில் நேற்று 269 கோவிட்-19 சம்பவங்கள் பதிவு

ஷா ஆலம், ஜன 30- நாட்டில் நேற்று 269 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றினால் பாதிக்கப்பட்டனர். அவற்றில் மூன்று சம்பவங்கள் வெளிநாடுகளிலிருந்து வந்தவர்களிடம் கண்டு பிடிக்கப்பட்டன.

நேற்றைய தொற்றுகளுடன் சேர்த்து கடந்த 2020 பிப்ரவரி மாதம் முதல் நேற்று வரை கோவிட்-19 நோய்த் தொற்றுக்கு ஆளானவர்களின் மொத்த எண்ணிக்கை 50 லட்சத்து 36 ஆயிரத்து 140 ஆக அதிகரித்துள்ளது.

இந்நோய்த் தொற்றுடன் தொடர்புடைய மரணச் சம்பவம் எதுவும் நேற்று பதிவாகவில்லை என்று சுகாதார அமைச்சின் கோவிட்நாவ் அகப்பக்கம் கூறியது. இந்நோயினால் இறந்தவர்களின் எண்ணிக்கையும் 36,940 ஆக உள்ளது.

கோவிட்-19 நோய்த் தொற்றிலிருந்து நேற்று 285 பேர் குணமடைந்தனர். இதனுடன் சேர்த்து இந்நோயிலிருந்து குணமடைந்தவர்கள் எண்ணிக்கை 49 லட்சத்து 89 ஆயிரத்து 720 ஆக உயர்வு கண்டுள்ளது.

நேற்றைய நிலவரப்படி 9,480 பேர் கோவிட்-19 நோய்த் தொற்றின் தீவிர தாக்கத்தைக் கொண்டுள்ளனர். அவர்களில் 9,088 பேர் அல்லது 95.9 வீடுகளில் தனிமைப்படுத்தப்பட்டுள்ளனர்.

மேலும் 21 பேர் தீவிர சிகிச்சைப் பிரிவில் அனுமதிக்கப்பட்டுள்ள வேளையில் அவர்களில் 14 பேருக்கு செயற்கை சுவாசக் கருவி பொருத்தப்பட்டுள்ளது.


Pengarang :