ECONOMYMEDIA STATEMENT

சிலாங்கூர் மாநிலத்திற்கு கல்வியமைச்சர் மரியாதை நிமித்த வருகை

ஷா ஆலம், பிப் 1- கல்வியமைச்சர் ஃபாட்லினா சீடேக் சிலாங்கூர் மாநிலத்திற்கு இன்று மரியாதை நிமித்த வருகை மேற்கொண்டார்.  மாநில அரசு தலைமைச் செயலகத்திற்கு இன்று காலை வருகை புரிந்த அவரை மந்திரி புசார் டத்தோஸ்ரீ அமிருடின் ஷாரி வரவேற்றார்.

கல்வியமைச்சர் மற்றும் மந்திரி புசாருக்கும் இடையே ஒரு மணி நேரம் நடைபெற்ற இந்த சந்திப்பின் போது மாநில கல்வி இலாகா அதிகாரிகளும் உடனிருந்தனர்.

கல்வியமைச்சுடனான நல்லுறவை அதிகரிப்பதையும் மாநில அரசின் பல்வேறு கல்வித் திட்டங்களில் ஒத்துழைப்பை மேம்படுத்துவதையும் இந்த வருகை நோக்கமாக கொண்டிருந்ததாக அமிருடின் தெரிவித்தார்.

சிலாங்கூர் மாநில அரசினால் நடத்தப்படும் டியூஷன் ராக்யாட் மற்றும் பித்தாரா யாயாசான் சிலாங்கூர் போன்ற திட்டங்களை மேலும் வலுப்படுத்துவது குறித்து நாங்கள் பேச்சு நடத்தினோம். 

இந்த சந்திப்பின் போது மக்கள் தொகை அதிகம் உள்ள பகுதிகளில் பள்ளிகளை நிர்மாணிப்பது நடப்பிலுள்ள பள்ளிகளில் அடிப்படை வசதிகளை மேம்படுத்துவது குறித்தும்  பேசப்பட்டது என்று அவர் சொன்னார்.

இந்த சந்திப்பின் போது முன்வைக்கப்பட்ட கோரிக்கைகள் கூட்டரசு நிலையில் குறிப்பாக வரும் பிப்வரி 24ஆம் தேதி தாக்கல் செய்யப்படவிருக்கும் 2023 வரவு செலவுத் திட்டத்தில் சேர்க்கப்படும் என தாங்கள் எதிர்பார்ப்பதாகவும் அவர் தெரிவித்தார்.


Pengarang :