ALAM SEKITAR & CUACA

பெட்டாலிங் ஜெயாவில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு

ஷா ஆலம், ஏப் 23- பெட்டாலிங் ஜெயாவில் காற்றின் தரக் குறியீடு (ஐ.பி.யு.) நேற்றிரவு ஆரோக்கியமற்ற நிலையில் பதிவானது.

இப்பகுதியில் இரவு 10.00 மணியளவில் காற்றின் தரக் குறியீடு 108 ஆக பதிவானதாக சுற்றுச்சூழல் இலாகாவின் மலேசியா காற்றுத் தரக் குறியீட்டு மேலாண்மை அகப்பக்கம் தெரிவித்தது.

காற்றின் தரம் சிறப்பாக உள்ள பகுதிகளாக கோத்தா திங்கி (48), சண்டகான் (34), கியாமானிஸ் (42) ஆகியவை உள்ளன. செபராங் பிறை (72), நீலாய் (71), சிரம்பான் (80), ஷா ஆலம் (76) ஆகிய பகுதிகளில் காற்றின் தரம் மிதமான அளவில் காணப்படுகிறது.

காற்றின் தரக் குறியீட்டின் படி 0 முதல் 50 வரையிலான ஐ.பி.யு. சிறப்பானதாகவும் 51 முதல் 100 வரை மிதமானதாகவும் 101 முதல் 200 வரை ஆரோக்கியமற்றதாகவும் 201 முதல் 300 வரை மிகவும் ஆரோக்கியமற்றதாகம் 300க்கும் மேல் ஆபத்தானதாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது.


Pengarang :