ALAM SEKITAR & CUACAANTARABANGSA

துருக்கி பூகம்பத்தில் 51,000 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டது

இஸ்தான்புல், ஏப் 23- இவ்வாண்டு தொடக்கத்தில் துருக்கியை உலுக்கிய இரட்டை பூகம்பத்தில் 50,783 பேர் உயிரிழந்தது உறுதி செய்யப்பட்டுள்ளதாக அந்த நாட்டின் உள்துறை அமைச்சர் கூறினார்.

இப்பேரிடரில் 297 பேர் காணாமல் போனதாக அறிவிக்கப்பட்டுள்ளதாக அமைச்சர் சுலைமான் சொய்லுவை மேற்கோள் காட்டி அனாடோலு செய்தி நிறுவனம் தெரிவித்தது.

காணாமல் போனதாக அறிவிக்கப் பட்டவர்களில் ஆறு வயது வரையிலான 30 சிறார்களும் அடங்குவர் எனக் கூறிய அவர், இவர்கள் தவிர 7 முதல் 12 வயது வரையிலான 20 பேரும், 13 முதல் 17 வயது வரையிலான 36 பேரும் காணாமல் போனவர்கள் பட்டியலில் உள்ளதாகச் சொன்னார்.

இந்த பூகம்பத்தில் இதுவரை காணாமல் போனதாக புகார் செய்யப்பட்டவர்களில் 86 பேர் சிறார்களாவர். உயிரிழந்த வெளிநாட்டினரின் எண்ணிக்கை 7,302 ஆகும் என்றார் அவர்.

இச்சம்பவத்தில் உயிரிழந்த 985 பேரை அடையாளம் காணும் பணி தொடர்ந்து மேற்கொள்ளப்பட்டு வருவதாகவும் அவர் தெரிவித்தார்.

பூகம்பத்தால் ஏற்பட்ட கட்டிட இடிபாடுகளை அகற்றும் பணி முழுமையாக பூர்த்தியடைந்து விட்டதாகவும் அவர் கூறினார். 11 பிரதேசங்களில் உள்ள 57,000 இடிந்த கட்டிடங்களில் 50,000 கட்டிடங்கள் அகற்றப்பட்டு விட்டன. என்று அவர் சொன்னார்.


Pengarang :