ALAM SEKITAR & CUACAECONOMYNATIONAL

கின்ராரா தொகுதி ஏற்பாட்டில் வசதி குறைந்த குடும்பங்களுக்கு  ஒரு டன் காய்கறிகள் விநியோகம்

ஷா ஆலம், மே 4- மக்கள் சத்து நிறைந்த உணவு வகைகளை உட்கொள்வதை ஊக்குவிக்கும் வகையில் கின்ராரா சட்டமன்றத் தொகுதி  ஒரு டன்னுக்கும் மேற்பட்ட காய்கறிகளை பூச்சோங் வட்டார மக்களுக்கு விநியோகம் செய்தது.

மலிவு விலை அடுக்குமாடி குடியிருப்புகள் உள்ளிட்ட பகுதிகளில் மேற்கொள்ளப்பட்ட இந்த காய்கறிகள் விநியோகம் மூலம் 200க்கும் மேற்பட்ட குடும்பங்கள் பயனடைந்ததாக தொகுதி சட்டமன்ற உறுப்பினர் இங் ஸீ ஹான் கூறினார்.

இந்த காய்கறி விநியோகத் திட்டத்தின் கீழ் வெண்டைக்காய், கடுகுக் கீரை, கங்கோங், வெள்ளரி, பாகற்காய், தக்காளி, பயிற்றங்காய், பீன்ஸ், மிளகாய் உள்ளிட்ட வேளாண் பொருள்கள் விநியோகிக்கப்பட்டதாக அவர் சொன்னார்.

இந்த திட்டத்திற்கு அரசு சாரா அமைப்புகளும் தனியார் நிறுவனங்களும் ஏற்பாட்டு ஆதரவை வழங்கின. வசதி குறைந்தவர்களுக்கு உதவும் திட்டத்தை அமல்படுத்துவதற்கு அவர்கள் முன்னதாக கோரிக்கை விடுத்திருந்தனர். அவர்களுக்கு உதவும் வகையில் அந்த காய்கறிகளை நாங்கள் விநியோகம் செய்தோம் என்றார் அவர்.

வசதி குறைந்த தரப்பினருக்கு இத்தகைய உதவிகளை வழங்க விரும்பும் தரப்பினரை தாங்கள் பெரிதும் வரவேற்பதாக அவர் மேலும் குறிப்பிட்டார்.


Pengarang :