EKSKLUSIFMEDIA STATEMENT

பன்முகத்தன்மையை மதிப்பது பல்லின சமூகத்தில்  அமைதிக்கான திறவுகோலாகும்- சுல்தான் விசாக தின வாழ்த்து

ஷா ஆலம், மே 4- பல்லின மக்களிடையே அமைதி மற்றும் நிலைத்தன்மையை உறுதி செய்வதில் சமய வேறுபாடுகளை நிபந்தனையின்றி மதிக்கும்  போக்கு முக்கியமானதாக விளங்குகிறது என்று மேன்மை தங்கிய சிலாங்கூர் சுல்தான் கூறியுள்ளார்.

பல்வேறு மத போதனைகளை கடைபிடிப்பதில் கடைபிடிக்கும் மிதமான போக்கு நாட்டின் அமைதிக்கு திறவுகோலாக அமைகிறது என்று சுல்தான் ஷராபுடின் இட்ரிஸ் ஷா சொன்னார்.

இன்று கொண்டாடப்படும் விசாக தினத்தை முன்னிட்டு பௌத்த சமயத்தினருக்கு அரச அலுவலக பேஸ்புக் வாயிலாக வழங்கிய வாழ்த்துச் செய்தியில் அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இது போன்ற பிற சமய விழாக்களை மதிப்பதன் மூலம் இந்நாட்டிலுள்ள பல்லின மக்களும் நல்லிணக்கம் நிறைந்த ஒரு சமூகமாக வாழ முடியும் என்றும் அவர் தெரிவித்தார்.

கௌதம புத்தரின் பிறப்பு, மக்களுக்கு ஏற்படுத்திய விழிப்புணர்வு மற்றும் இறப்பை நினைவுக் கூறும் தினமாக இந்த விசாக தினம் விளங்குகிறது. இந்த தினத்தை கொண்டாடும் வகையில் பௌத்தர்கள் புறாக்களை வானில் பறக்க விடுவதோடு ஏழைகளுக்கும் உணவளிக்கின்றனர் என்று அவர் தமது வாழ்த்துச் செய்தியில் கூறினார்.


Pengarang :