ECONOMYMEDIA STATEMENTNATIONAL

மலேசியாவில் ஏப்ரல் வரை 5ஜி அலைக்கற்றை அடைவு நிலை 59.5 விழுக்காட்டை எட்டியது

கூச்சிங், மே 21- மலேசியாவில் 5ஜி அலைக்கற்றை சேவையின் அடைவு  நிலை கடந்த ஏப்ரல் மாதம் இறுதி வரை 59.5 விழுக்காட்டை எட்டியுள்ளதாக தொடர்பு மற்றும் இலக்கவியல் துறை அமைச்சர் ஃபாஹ்மி ஃபாட்சில் கூறினார்.

அதே சமயம் சரவா மாநிலத்தில் இந்த அலைக் கற்றையின் அடைவு நிலை  34 விழுக்காடாக உள்ளது என்று அவர் சொன்னார்.

சரவா மாநிலத்தைப் பொறுத்தவரை இந்த அடைவு நிலை போதுமானதாக இல்லை என்று நான் கருதுகிறேன். ஆகவே, 5ஜி அலைக்கற்றை தேவைப்படும் இடங்களை பட்டியலிடும் அதேவேளையில் மலேசிய தொடர்பு மற்றும் பல்லுடக ஆணையத்துடன் ஒருங்கிணைந்து செயல்படும்படி அம்மாநில அரசைக் கேட்டுக் கொள்கிறேன் என அவர் தெரிவித்தார்.

மாநில அரசு விரும்பும் இடங்களில் 5ஜி சேவையை விரைந்து வழங்குவதற்கு இந்த ஒருங்கிணைப்பு அவசியமாகிறது என்று நேற்று இங்கு நடைபெற்ற 2023 ஆம் ஆண்டு அனைத்துலக தொலைத்தொடர்பு மற்றும் தகவலறிந்த சமூக தின நிகழ்வில் கலந்து கொண்டு உரையாற்றிய போது அவர் இவ்வாறு குறிப்பிட்டார்.

இவ்வாண்டு இறுதிக்குள் அடர்த்தியான மக்கள் தொகை கொண்ட 80 விழுக்காடு பகுதிகளில் 5ஜி  அலைக்கற்றை சேவையை வழங்க அரசாங்கம் இலக்கு  நிர்ணயித்துள்ளதாக அமைச்சர் முன்னதாக கூறியிருந்தார்


Pengarang :