ECONOMYMEDIA STATEMENTPBT

தேசிய தினத்தை முன்னிட்டு கார் நிறுத்தக் குற்றங்களுக்கான அபராதம் 15 வெள்ளியாகக் குறைப்பு- எம்.பி.கே  அறிவிப்பு

கிள்ளான், ஆக 30- தேசிய தினத்தை முன்னிட்டு கார் நிறுத்தக் குற்றங்களுக்கான அபராதத் தொகையை கிள்ளான் நகராண்மைக் கழகம் 15.00 வெள்ளியாக குறைத்துள்ளது.

இந்த சலுகை இம்மாதம்  21ஆம் தேதி தொடங்கி நவம்பர் மாதம் 17ஆம் தேதி வரை அமலில் இருக்கும் என்று கிள்ளான் நகராண்மைக் கழகத் தலைவர்  நோராய்னி ரோஸ்லான் கூறினார்.

மாற்றுத் திறனாளிகளுக்கான பிரத்தியேகத் தடங்களில் வாகனங்களை நிறுத்திய குற்றம் தவிர்த்து இதர வகையான கார் நிறுத்துமிடக் குற்றங்கள் அனைத்துக்கும் இந்தச் சலுகை பொருந்தும் என்று அவர் சொன்னார்.

கடுமையான நடவடிக்கைகளுக்கு உள்ளாவதைத் தவிர்ப்பதற்கு ஏதுவாக இந்த அரிய சந்தர்ப்பத்தைப் பயன்படுத்தி குறைந்தப் பட்ச அபராதத் தொகையான 15.00 வெள்ளியைச் செலுத்தும்படி வாகனமோட்டிகளை அவர் கேட்டுக் கொண்டார்.

அபராதத் தொகையை JomPay, i-Kiosk அல்லது web ipay.mpklang.gov.my என்ற அகப்பக்கம் வாயிலாகச் செலுத்தலாம். மேல் விபரங்களுக்கு  03-33758038 அல்லது 03-33758037 என்ற எண்களில் தொடர்பு கொள்ளலாம்.

இதனிடையே, அடுத்த மாதம் 5ஆம் தேதி சுல்தான் அப்துல் சமாட் ஆடிட்டோரியத்தில் இலவச மருத்துவ முகாம் மற்றும் இரத்த தானம் இயக்கத்தை நகராண்மைக் கழகம் நடத்தவுள்ளதாகவும் நோராய்னி குறிப்பிட்டார்.

கிள்ளான், துங்கு அம்புவான் ரஹிமா மருத்துவமனை, அனிக்கா கிளினிக், கிள்ளான் சுகாதார அலுவலகம், டிரெண்டி ஐ ஹாப் நிறுவனம் ஆகிய தரப்பினரின் ஒத்துழைப்புடன் இந்த மருத்துவ முகாம் நடத்தப்படுகிறது என்று அவர் மேலும் சொன்னார்.


Pengarang :