HEADERADMEDIA STATEMENTNATIONAL

மலேசியாவை ஒரு சிறந்த நாடாக மெருகூட்ட ஒற்றுமையே அச்சாணி என முழக்கமிட்டார்- பிரதமர்

புத்ராஜெயா, ஆகஸ்ட் 30: பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார் இப்ராஹிம் தனது 2023 ம் ஆண்டு தேசிய தின செய்தியில், மலேசியாவை ஒரு சிறந்த நாடாக மெரு கூட்டவும்,  நாட்டின் சுதந்திரத்தை பாதுகாப்பதில் ஒற்றுமையின் முக்கியத்துவத்தையும் வலியுறுத்தினார்.

மலேசியாவின்  ஆற்றல்  உலகின் எந்த நாட்டுடனும் போட்டியிடக்கூடியது, அதற்கான தனி திறமையை நாடு கொண்டுள்ளது.  நாட்டை முன்நோக்கி  எடுத்து செல்ல திறமையும் ஆற்றலும் கொண்ட  வல்லுநர்களுக்கு  இங்கு பஞ்சமில்லை, திறமையானவர்கள்  ஏராளமாக இருப்பதால் இந்த விருப்பத்தை அடைய முடியும் என்றார்.

“அபிலாசைகள் மற்றும் நம்பிக்கைகளுக்கு மத்தியில், நாடு ஒன்றிணைந்து நிலையான பண்பட்ட மடாணி பொருளாதாரத்தை உருவாக்க வேண்டும், அத்துடன், இதில்  பல்வேறு இனங்கள் மற்றும் மதங்களைச் சேர்ந்த அனைத்து மக்களுக்கும் நீதியான பங்கீடுகள் உறுதி செய்ய வேண்டும்.

“நமக்கும், நம் குடும்பத்தாருக்கும், நம் சமுதாயத்திற்கும்   நம் வாழ்வில் எஞ்சியிருக்கும் நேரத்தை பயன்மிக்க ரீதியில் பயன்படுத்தி, இந்த நாடு சாதாரணமானது அல்ல என்பதை  உலகுக்கு  உணர்த்துவதில் உறுதியாக இருப்போம்.

புத்ராஜெயா சர்வதேச மாநாட்டு மையத்தில் (PICC), இந்த நாட்டில் ஏராளமான வளம் உண்டு, அதனை ஆக்ககரமான சக்தியாக மாற்றும், ஆற்றலும்  நமக்குண்டு புறப்படுங்கள்  புதிய மடாணி யுகத்தை வடிவமைக்க ” என்று பிரதமர் டத்தோ ஸ்ரீ அன்வார்  உற்சாகமூட்டும்  தனது முதல் தேசிய தின செய்தியில்,  7,000 க்கும் மேற்பட்ட பங்கேற்பாளர்கள் முன்னிலையில் கூறினார்.

இவ்வாண்டு  2023 தேசிய தினத்தை ஒட்டி  துணைப் பிரதமர்கள் டத்தோஸ்ரீ டாக்டர் அஹ்மட் ஜாஹிட் ஹமிடி மற்றும் டத்தோஸ்ரீ ஃபதில்லா யூசோப், கேபினட் அமைச்சர்கள், மூத்த அரசு அதிகாரிகள், குடியிருப்பாளர்களின் பிரதிநிதிகள் மற்றும் பள்ளி மாணவர்களுடன் சேர்ந்து தேசிய தின  பிரகடனம் எடுக்கும்  விழாவில்  கலந்து கொண்ட பிரதமர்  அவ்வாறு  கூறினார்.

விழா உள்ளூர் தொலைக்காட்சி மற்றும் சமூக ஊடகங்களிலும் நேரடியாக ஒளிபரப்பப்பட்டது.  அந்த அபிலாஷையை அடைவதற்கான நிபந்தனைகளில் ஒன்று “மெர்டேகா ரக்யாட்” என்பதை உறுதி செய்வதாகும்.  இது  காலனித்துவ   தேக்க சிந்தனையிலிருந்து விடுபட்டு,  மனதாலும் ஆத்ம ரீதியிலும் சுதந்திரமான  சிந்தனையுடைய  ஒரு சமூகமாகும்.

மலேசியாவின் முன்னேற்றத்தை உறுதி செய்ய, இந்த நாட்டில் உள்ள அனைத்து மட்ட மக்களும் சுதந்திரமாக இருக்க வேண்டும் என்று பிரதமர் கூறினார்.

கடந்த 20 ஆண்டு காலம் வளர்ச்சியற்ற செயல்பாட்டிற்கு பின், மலேசியாவை இந்த நூற்றாண்டில் சிறந்த நாடாக வெளிப்படுவதை உறுதி செய்வதில் எல்லா இனங்களின்  ஒற்றுமையான பங்களிப்பும் ஒவ்வொரு மலேசியரின் கடப்பாடும்  முக்கியமானது .  .

இந்த நாட்டிலுள்ள எல்லா குடிமக்களின் உரிமைகளும்  காத்து, எவரையும் விட்டுவிடாமல் பாதுகாப்போம் என்று மடாணி ஒற்றுமை அரசு உறுதி அளிக்கிறது,  அதே வேளையில் பூமிபுத்ரா மற்றும் இஸ்லாம்  மதத்தின் உரிமைகள் மற்றும் சலுகைகள் போன்ற அரசியலமைப்பில் குறிப்பிடப்பட்டுள்ள விஷயங்கள் தொடர்ந்து பாதுகாக்கப்படும் என்றார்.

“இந்த நாடு அனைத்து மக்களுக்கும் சொந்தமானது என்ற உணர்வை நாம் பேண வேண்டும். இந்த ஒற்றுமை மற்றும் ஒத்துழைப்பு, நம்பிக்கையான  எதிர்காலத்திற்கு உத்தரவாதம் அளிக்க வேண்டும்,” என்று அவர் கூறினார்.


Pengarang :