ECONOMYMEDIA STATEMENTSELANGOR

திறந்த டோல் கட்டண முறை நெரிசலைக் குறைத்து வாகனமோட்டிகளின் பணியை எளிதாக்குகிறது

கோலாலம்பூர், அக் 8- அரசாங்கம் அமல்படுத்தியுள்ள திறந்த டோல்
கட்டண வசூல் முறை (எஸ்.பி.டி.) வாகனமோட்டிகள் டெபிட் மற்றும்
கிரடிட் கார்டுகள் மூலம் கட்டணத்தை செலுத்துவதற்குரிய வாய்ப்பினை
வழங்குவதோடு டோல் சாவடிகளில் நெரிசல் ஏற்படுவதை தவிர்க்கவும்
உதவுகிறது.
இந்த திறந்த டோல் கட்டண வசூல் முறையின் வாயிலாக நேரத்தை
மிச்சப்படுத்த முடிவதோடு ஒரே முறையைப் பயன்படுத்தி டோல்
கட்டணத்தை செலுத்தும் கட்டாயத்தையும் தவிர்க்கிறது என்று நிறுவனம்
ஒன்றின் மின் பொறியாளரான முகமது ஷியாபாட் சஹாட் (வயது 25)
கூறினார்.
டச் அண்ட் கோ கார்டில் போதுமான அளவு பணம் இல்லாத காரணத்தால்
டோல் சாவடிகளை கடக்க முடியாமல் பல வாகனங்கள் பின்னோக்கி
வரும் சம்பவங்கள் முன்பு அடிக்கடி கண்டுள்ளோம். எனினும் தற்போது
அமல்படுத்தப்பட்டுள்ள திறந்த டோல் கட்டண வசூல் முறையின் கீழ் டச்
அண்ட் கோ கார்டுகளில் பண மதிப்பை கூட்டுவதற்காக வாகனத்தை
நிறுத்த வேண்டிய அவசியம் இல்லை என்று அவர் சொன்னார்.
நாட்டிலுள்ள 11 நெடுஞ்சாலைகளில் டெபிட் மற்றும் கிரடிட் கார்களைப்
பயன்படுத்தி டோல் கட்டணம் செலுத்துவதற்கு ஏதுவாக எஸ்.பி.டி.
முறையை பொதுப்பணித்துறை அமைச்சர் டத்தோஸ்ரீ அலெக்ஸாண்டர்
நந்தா லிங்கி கடந்த செப்டம்பர் மாதம் 2ஆம் தேதி அறிமுகப்படுத்தினார்.
இதனிடையே, இந்த எஸ்.பி.டி. கட்டண முறை நடைமுறைக்கு ஏற்றதாக
உள்ளதாக கூறிய முகமது ஜாம்ரி முகமது ரஷிம் (வயது 33), இந்த
முறையின் கீழ் கிரடிட் மற்றும் டெபிட் கார்டுகள் வாயிலாக மட்டுமின்றி
ஆப்பிள் பெய் செயலி வாயிலாகவும் டோல் கட்டணம் செலுத்த இயலும்
என்று சொன்னார்.
இந்த எஸ்.பி.டி. முறை மக்களுக்கு அதிக அனுகூலங்களை வழங்குகிறது.
நாம் பணப்பையை வீட்டில் வைத்து விட்டு வந்தாலும் ஆப்பிள் பெய்
செயலி மூலம் டோல் கட்டணத்தைச் செலுத்த இயலும் என

Pengarang :