ALAM SEKITAR & CUACAANTARABANGSA

இந்தோனேசியாவில் காட்டுத் தீயை அணைக்க உடனடி நடவடிக்கைத் தேவை- அதிபர் ஜோக்கோவி வலியுறுத்து

ஜாகார்த்தா, அக் 8- இந்தோனேசிய  நாட்டின் காடுகள் மற்றும் நிலத்தில் ஏற்பட்டுள்ளத் தீயிலிருந்து வரும் புகை  பிற இடங்களுக்கும் பரவ வாய்ப்புள்ளதாக அதிபர் ஜோகோ விடோடோ எச்சரித்துள்ளார்.

இதனைக் கருத்தில் கொண்டு ராணுவம் மற்றும் காவல்துறை உயர் அதிகாரிகளும் பிராந்திய அரசும் இந்தப் பிரச்னையைச் சமாளிக்க உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் அவர் உத்தரவிட்டார்.

உண்மையில் ஒவ்வொரு இடத்திலும் ஏற்படும் நெருப்பும் புகையை உருவாக்குகிறது. அது காற்றின் மூலம் இதர இடங்களுக்கும் பரவக்கூடியது  ஜோகோவி என்று பிரபலமாக அறியப்பட்ட ஜோகோ விடோடோ கூறினார்.

ஒவ்வொரு தீப்பொறியும்  எவ்வளவு சிறியதாக இருந்தாலும் அது பரவாமல்  கட்டுப்படுத்தப்பட வேண்டும்  என்று அவர் ஒரு அறிக்கையில் வலியுறுத்தினார்.

இந்தோனேசியாவின் சுமத்திரா மற்றும் கலிமந்தானில் ஏற்பட்ட தீயினால் ஏற்பட்ட புகையை தொடர்ந்து அண்டை நாடுகளில் காற்று மாசுபாடு அதிகரித்து வருவது குறித்து அவர் கருத்து தெரிவித்தார்.

தனது நாட்டில் தற்போது வெப்பநிலை இயல்பை விட அதிகமாக உள்ளதைச் சுட்டிக் காட்டிய அவர்,  வறட்சி காலம்  நீடிக்கும் சாத்தியம் உள்ளதால் பல பகுதிகளில் வெப்பத் திட்டுகள் அதிகரிக்கவும் விரிவாகவும் வாய்ப்புள்ளது என்றார்.

எனினும், கடந்த 2015ஆம் ஆண்டு ஏற்பட்ட காட்டுத் தீயுடன் ஒப்பிடுகையில், தற்போது மேற்கொள்ளப்பட்டு வரும் தீயை கட்டுப்படுத்தும் முயற்சிகள் சிறப்பாக இருப்பதாக அவர் நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

கடந்த மூன்று மாதங்களாக ஜாவா உள்ளிட்ட பல பகுதிகளில் மழை பெய்யாத நிலையில் ஆகஸ்ட் முதல் வெப்பப் பகுதிகள் அதிகரித்ததைத் தொடர்ந்து இந்தோனேசியாவில் வறட்சி பருவத்தின் உச்சம் இந்த மாதம் ஏற்படும் என்று எதிர்பார்க்கப்படுகிறது.

இந்தோனேசியாவின் பல பகுதிகளில் தற்போது ஏற்பட்டுள்ள காட்டுத் தீ மற்றும் நிலத்தீயைக் கையாள்வதற்கு மலேசியா இணைந்து செயல்படத் தயாராக இருப்பதாக இந்தோனேசிய வெளியுறவு அமைச்சு தெரிவித்துள்ளது.

இயற்கை வளம், சுற்றுச்சூழல் மற்றும் பருவநிலை மாற்ற அமைச்சர் நிக் நஸ்மி நிக் அகமது தனது இந்தோனேசிய அமைச்சர் சிட்டி நுர்பயா பாக்கருக்கு அனுப்பிய அதிகாரப்பூர்வ கடிதத்தில் மலேசியாவின் இந்த விருப்பம் தெரிவிக்கப்பட்டுள்ளது.


Pengarang :