MEDIA STATEMENTNATIONAL

நாட்டில் வேலையின்மை தொடர்ந்து குறைந்து வருகிறது! அமைச்சர் சிவகுமார் தகவல்

மலாக்கா, அக் 8- சொக்சோ எனப்படும் சமூக பாதுகாப்பு நிறுவனத்தின் ஏற்பாட்டில் மேற்கொள்ளப்படும் வேலை வாய்ப்பு கண்காட்சி வழி நாட்டில் வேலையின்மை தொடர்ந்து குறைந்து வருவதாக மனித வள அமைச்சர் வ சிவகுமார் தெரிவித்தார்.

சொக்சோ மூலம் மனித வள அமைச்சு நாடு தழுவிய அளவில் வேலை வாய்ப்பு கண்காட்சியை வெற்றிகரமாக நடத்தி வருகிறது.  இதன் மூலம் வேலை இல்லாதவர்களுக்கு புதிய வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தர முடிகிறது.

தற்போது தேசிய வேலையில்லாமை தொடர்ந்து 3.5 விழுக்காடாக  குறைந்துள்ளது. கடந்த ஆண்டுடன் ஒப்பிடுகையில் 3.6 சதவீதமாக இருந்த வேலையின்மை பிரச்சனை  இந்த  முதல் காலாண்டில் 3.5 விழுக்காடாக குறைந்துள்ளது.  குறிப்பாக மலாக்கா மாநிலத்திலும் வேலையின்மை தொடர்ந்து குறைந்து வருகிறது.

கடந்த ஆண்டில் 3.0 விழுக்காடாக இருந்தது. ஆனால் இவ்வாண்டில் இதுவரை இந்த எண்ணிக்கை 2.6 விழுக்காடாக  குறைந்துள்ளது என்று அவர் சொன்னார்.

மலாக்கா மாநிலத்தில் மனித வள அமைச்சின் ஏற்பாட்டில் நடைபெற்ற ஜெலாஜா மடானி நிகழ்ச்சியை மனித வள அமைச்சர் சிவகுமார் அதிகாரப்பூர்வமாக தொடக்கி வைத்து உரையாற்றிய போது இவ்வாறு தெரிவித்தார்.

Myfuture Jobs festival மூலம் நாட்டில் இதுவரை 4 லட்சத்து 55 ஆயிரத்து 350 பேர் வேலையில் அமர்த்தப்பட்டுள்ளனர். இதில் மலாக்கா மாநிலத்தில் மட்டும் 12,331 பேர் அடங்குவர்.

இன்று மலாக்காவில் நடைபெறும் ஜெலாஜா மடானி நிகழ்வில் 10 நிறுவனங்கள் பங்கேற்று 567 வேலை வாய்ப்புகளை ஏற்படுத்தித் தந்துள்ளன என்று அவர் சொன்னார்.


Pengarang :