ALAM SEKITAR & CUACANATIONAL

பந்திங், கிள்ளானில் காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவு

ஷா ஆலம், அக்  8-   இன்று மதியம் 2.00 மணி நிலவரப்படி சிலாங்கூரில் இரண்டு பகுதிகளில் காற்று மாசுக் குறியீடு (ஐ.பி.யு.) ஆரோக்கியமற்ற  அளவில் பதிவாகியுள்ளதாக மலேசிய காற்று மாசுக் குறியீடு மேலாண்மை அமைப்பு  தெரிவித்துள்ளது.  பந்திங்கில் காற்றின் தரம் 152 ஐ.பி.யு. ஆகவும் கிள்ளானில்  124 ஐ.பி.யு. ஆகவும் பதிவானதாக அந்த அமைப்பு தெரிவித்தது.

மேலும், புத்ராஜெயா (151) மற்றும் கோலாலம்பூரில் உள்ள இரண்டு பகுதிகளான பத்து மூடா (103) மற்றும் செராஸ் (155) ஆகியவை காற்றின் தரம் ஆரோக்கியமற்ற நிலையில் பதிவான இதர இடங்களாகும்.

நெகிரி செம்பிலான் மாநிலத்தின் நீலாயில்  ஐ.பி.யு. அளவு  162 ஆகவும்  சிரம்பானில் 151 ஆகவும் போர்ட்டிக்சனில்  155 ஆகவும் பதிவான வேளையில்   அலோர் காஜா மற்றும் மலாக்கா நகர் மற்றும் புக்கிட் ரம்பாயில் முறையே 154 மற்றும் 163ஆக ஐ.பி.யு. பதிவானது.

0 முதல் 50 வரையிலான ஐ.பி.யு. குறியீடு சிறப்பானதாகவும் 51 முதல் 100 வரையிலானக் குறியீடு மிதமானதாகவும் 101 முதல் 200  வரையிலானப் குறியீடு  ஆரோக்கிய மற்றதாகவும் 201 முதல் 300  வரையிலானக் குறியீடு மிகவும் ஆரோக்கியமற்றதாகவும்  300 மற்றும் அதற்கு மேற்பட்டக் குறியீடு ஆபத்தானதாகவும் வகைப்படுத்தப்பட்டுள்ளது..

காற்றின் தரப் பற்றிய சமீபத்திய தவல்களை அறிய  அறிய பொதுமக்கள் https://apims.doe.gov.my/home.html அகப்பக்கத்தைப் பார்வையிடலாம் .


Pengarang :